Google Maps Latest Update : Google Maps பயன்படுத்துபவர்கள், இதனுடைய பயனுள்ள அம்சங்களை பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
Google Maps பயன்படுத்தி என்ன வேலைகளையெல்லாம் சட்டென்று முடிக்கலாம்? தெரிந்துக் கொள்ளுங்கள்...
கூகுள் மேப்ஸ் மூலம், பயணங்களுக்கான விமான டிக்கெட் விலை பற்றிய தகவல்களைப் பெறலாம். இது மட்டுமின்றி, விமானத்தின் அட்டவணை, விலை மற்றும் இணைப்பு தொடர்பான பிற விவரங்களையும் கூகுள் மேப்ஸ் கொடுக்கும்
மின்சார வாகனம் இருந்தால் அல்லது புதிய எலக்ட்ரிக் வாகனம் வாங்க நினைத்தால், கூகுள் மேப்ஸ் மூலம் அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். 'எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள்' என்று எழுதி தேடினால் அடுத்த நொடியில் தகவல்கள் கிடைத்துவிடும்
புதிய இடத்திற்கு சென்றால், கூகுள் மேப்பின் மளிகைக் கடை அம்சம் உங்களுக்கு மிகவும் சிறப்பானது. உங்கள் அருகில் உள்ள மளிகைக் கடை எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்
கூகுள் மேப் மூலம் எந்தப் பாதையின் தூரத்தையும் அளவிட முடியும். வரைபடத்தில் Measure Any Distance or Area என்ற அம்சம் உள்ளது.
கூகுள் மேப் மூலம் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து பற்றிய தகவலையும் பெறலாம். கூகுள் மேப்பில் சிவப்பு நிறம் அதிக ட்ராஃபிக்கைக் குறிக்கிறது, பச்சை நிறம் வெற்று சாலையைக் குறிக்கிறது.
கூகுள் மேப்ஸின் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்று பார்க்கிங். இந்த அம்சத்தின் மூலம், ஷாப்பிங் மாலில் உங்கள் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை எளிதாகக் கண்காணிக்கலாம்
கூகுள் மேப்ஸின் Your Timeline அம்சத்தின் மூலம், எந்த தேதியில் நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பதை அறியலாம்.
புதிதாக செல்லும் இடத்தில் என்ன சிறப்பு, எது எங்கே கிடைக்கும், ஊரின் முக்கியமான இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம், சுங்கச்சாவடி எங்கிருக்கிறது என்பது முதல், நல்ல ஹோட்டல் வரை அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்