LDL கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக குறைக்க உதவும் மூலிகை தேநீர் வகைகள்: குடிச்சே குறைக்கலாம்

Cholesterol Control Tips: எல்டிஎல் கொழுப்பு அதிகரித்தால், அதனால் இதய நோய்கள் வருவதோடு மட்டுமல்லாமல் பக்கவாதம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் நம்மை தாக்கக்கூடும். 

Herbal Drinks For Cholesterol Control: கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், அது நரம்புகளில் (தமனிகள்) நெரிசலை ஏற்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தைத் தடுத்து இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.  கொலஸ்ட்ரால் பிரச்சனை எந்த வயதினரையும் பாதிக்கும். தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் வாழ்க்கை முறையாலும் இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. வெளி உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்கும். சில இயற்கையான வழிகளில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) அளவை குறைக்கலாம். அவற்றில் மூலிகை பானங்களும் அடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் சில ஆரோக்கியமான மூலிகை பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

கொலஸ்ட்ரால் பிரச்சனை எந்த வயதினரையும் பாதிக்கும். தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் வாழ்க்கை முறையாலும் இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.

2 /10

கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, ஆனால் அதன் அதிகரிப்பு பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் இதனால் அதிகரிக்கின்றது.  

3 /10

சில இயற்கையான வழிகளில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) அளவை குறைக்கலாம். அவற்றில் மூலிகை பானங்களும் அடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் சில ஆரோக்கியமான மூலிகை பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /10

கிரீன் டீயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது உடலில் இருந்து கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைக்க உதவுகிறது. க்ரீன் டீயில் உள்ள கேடசின்கள் இதயத்தை வலுப்படுத்தி இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. தினமும் க்ரீன் டீ குடிப்பதால் உடலில் சேரும் கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைக்கலாம்.  

5 /10

இஞ்சியில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி தேநீர் நரம்புகளில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது. மேலும் இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதை காலை அல்லது மாலை வேளையில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக இஞ்சி தேநீர் குடிக்க வேண்டும்.  

6 /10

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. பூண்டு தேநீர் இதயத் தமனிகளைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.   

7 /10

பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய மசாலாவான இலவங்கப்பட்டை கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும். இலவங்கப்பட்டை தேநீரரில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உடலில் சேரும் கொழுப்பை குறைக்கவும் உடல் உப்பசத்தை கரைக்கவும் இது உதவுகிறது.  

8 /10

மஞ்சளில் குர்குமின் என்ற தனிமம் உள்ளது. இது நரம்புகளில் படிந்திருக்கும் பிளேக் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மஞ்சள் தேநீர் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஆகையால் தினமும் இதை உட்கொள்வது கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நல்லது.   

9 /10

இவை தவிர ஆரோக்கியமான உணவுகள், வாழ்க்கை முறை, உடல் செயல்பாடுகள் ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைகக் உதவும். ஆகையால் இவற்றில் கவனமாக இருப்பது மிக அவசியம்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.