தற்போதைய காலகட்டத்தில் முதுகுவலி இளம் வயதினரில் இருந்து அனைத்து வயதினரையும் தொந்தரவு செய்கிறது எனலாம். அத்தகைய பிரச்சனைக்கான தீர்வை இதில் காணலாம்.
சமீப நாட்களில், முதுகுவலி பிரச்சனைகள் சிறிய குழந்தைகள் முதல் அனைத்து வயதினரையும் பாதிக்கின்றன. வேலை அழுத்தம் காரணமாக பெரும்பாலானோர் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்,
ஒரு சிலருக்கு மரபியல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. சில சமயம் உடலில் ரத்தம் குறைந்தாலும் இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
முதுகுவலி பிரச்சனை அதிகமாக இருக்கும்போது, தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால், வலி மிதமான அளவில் குறையும்.
மாதத்திற்கு இரண்டு முறையாவது உடல் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். உடலில் ரத்த ஓட்டம் சீராக மசாஜ் உதவும் என கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ச்சியாக உடற்பயிற்சி சிறந்த பலனை அளிக்கும். உங்கள் வேலை நேரத்தை பொறுத்து உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பது உடல் வலியை ஏற்படுத்தும். வேலையின் போது சிறிது நேரம் ஓய்வு எடுப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)