BSNL: குடும்பங்கள் கொண்டாடும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்... முழு விவரம்

BSNL Postpaid Plans: ப்ரீபெய்ட் திட்டங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பெரிய குடும்பங்களுக்கு லாபம் அளிக்கக்கூடியது. அந்த வகையில், பிஎஸ்என்எல் வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை இங்கு காணலாம்.

  • Jun 21, 2023, 10:27 AM IST

 

 

 

1 /7

ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நெட்வார்க்குகள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ப்ரீபெய்ட் திட்டங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பெரிய குடும்பங்களுக்கு லாபம் அளிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.  

2 /7

பொதுத்துறை நிறுவனமான தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் பயனர்களுக்கு கூடுதல் குடும்ப இணைப்புகளுடன் வரும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது.

3 /7

மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டங்கள் செயல்படுத்தும் கட்டணம் ரூ. 100 மற்றும் புதிய BSNL பயனர்களுக்கு பாதுகாப்பு வைப்பு கட்டணங்கள், உள்ளூர் + STD போஸ்ட்பெய்டு இணைப்புக்கு ரூ.500; உள்ளூர் + STD + ISD போஸ்ட்பெய்ட் இணைப்புக்கு ரூ. 2000 மற்றும் உள்ளூர்+STD+ISD+சர்வதேச ரோமிங் போஸ்ட்பெய்டு இணைப்புக்கு ரூ. 5,000 வசூலிக்கப்படுகிறது.

4 /7

ரூ.525 பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் திட்டமானது இலவச வரம்பற்ற அழைப்பு, 255ஜிபி வரை டேட்டா ரோல்ஓவருடன் 85ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்பு, 10 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 20 எஸ்எம்எஸ் உடன் ஒரு கூடுதல் குடும்ப சிம்மை வழங்குகிறது.

5 /7

பிஎஸ்என்எல் ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் 150ஜிபி வரை டேட்டா ரோல்ஓவருடன் 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் வருகிறது. பயனர்கள் அன்லிமிடெட் குரல் வசதியுடன் கூடிய இரண்டு குடும்ப சிம்கள், 50ஜிபி டேட்டா மற்றும் ஒவ்வொரு குடும்ப இணைப்புக்கும் தனித்தனியாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள்.

6 /7

ரூ.999 பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் திட்டத்தில், பயனர்கள் 75ஜிபி டேட்டா, 225ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள அதே இலவச எஸ்எம்எஸ் மற்றும் குரல் அழைப்புகளைப் பெறுகிறார்கள். இது மூன்று குடும்ப இணைப்புகள், வரம்பற்ற குரல் அழைப்பு, 75 ஜிபி டேட்டா மற்றும் ஒவ்வொரு குடும்ப இணைப்புக்கும் தனித்தனியாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது.

7 /7

ரூ.1525 பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் திட்டம் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. முந்தைய திட்டங்களின் நன்மைகளுடன், வரம்பற்ற குரல் அழைப்பு, 75 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் ஒரு இலவச குடும்ப சிம் உடன் வருகிறது.