தொப்பை கொழுப்பு

  • Sep 27, 2024, 14:10 PM IST
1 /10

ஆயுர்வேதத்தில் உடல் எடையை குறைக்கும் சக்தி வாய்ந்த பல உணவுப்பொருட்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. இவை கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் காணப்படுகின்றன. இவை கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. எடை இழப்பில் உதவும் அந்த சமையலறை மசாலாக்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /10

தேன்: தேன் ஆயுர்வேதத்தில் ஒரு நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இது கொழுப்பை எரிக்கிறது. இது கூடுதல் கலோரிகளையும் வேகமாக எரிக்கின்றது. இனிப்பு சுவையும், சூடான தன்மையும் கொண்ட தேன் செரிமான அமைப்பை சீராக்குவதோடு, இருமல் சளி ஆகியவற்றை குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிட வேண்டும். 

3 /10

பார்லி: பார்லியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பார்லியை உட்கொள்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, நீரிழிவு நோய் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தலாம். இது செரிமானம், நினைவாற்றல் மற்றும் உடல் வலிமையையும் மேம்படுத்துகிறது. 

4 /10

மிளகாய்: மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கலவை அதற்கு காரமான தன்மையை அளிக்கின்றது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதோடு கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றது.

5 /10

மஞ்சள்: இயற்கையிலேயே சூடான தன்மை கொண்ட மஞ்சள், உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் உதவுகின்றது. உடல் பருமனை குறைக்க, வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து சாப்பிடலாம்.

6 /10

இஞ்சி: இஞ்சி அதன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகின்றது. இஞ்சி எடை இழப்பில் பெரிய வகையில் உதவுகின்றது.

7 /10

நெல்லிக்காய்: நெல்லிக்காய் பித்தம், வாதம் மற்றும் கபம் ஆகிய 3 தோஷங்களையும் சமன் செய்து உடலை அமைதிப்படுத்துகிறது. இதன் காரணமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது. நெல்லிக்காய் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். நெல்லிக்காய், நெல்லிக்காய் பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உட்கொள்வது கலோரிகளை வேகமாக குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. 

8 /10

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. தினமும் காலையில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இது தொப்பை கொழுப்பை எரிக்கவும் உதவும்.

9 /10

தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க, மேலே கூறிய உணவுகளுடன் அடிப்படையான சில விஷயங்களிலும் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும். சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமாகும். இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.