புத்தாண்டின் முதல் 5 நாள்கள்... இந்த 4 ராசிகளுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட் - ஹேப்பியா இருக்கலாம்

Dhana Yog 2025: வரும் 2025ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி முதல் ஜன.5ஆம் தேதி வரை தன யோகம் உண்டாவதால், இந்த 4 ராசிகள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவை ஆகும்.

புத்தாண்டில் பல கிரகங்கள் பெயர்ச்சி அடைய இருக்கின்றன. அதனால், 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கம் உண்டாகும். அந்த வகையில், சந்திர பகவனால் பலன்பெறப்போகும் இந்த 4 ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

1 /8

ஜோதிடத்தின்படி, வரும் 2025 புத்தாண்டில் சந்திரன் மகரத்தில் இருப்பார். செவ்வாய் பகவானுக்கும் சந்திரனில் ஏழாம் பார்வை இருக்கும். இதனால் தனி யோகம் உருவாகும்.  

2 /8

புத்தாண்டு முதல் வாரத்தில் அதாவது ஜன.1ஆம் தேதி முதல் ஜன.5ஆம் தேதிவரை இந்த தன யோகத்தில் 4 ராசிகள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவை ஆகும்.   

3 /8

அந்த வகையில், எந்த 4 ராசிகளுக்கு வரும் ஜன. 1ஆம் தேதி முதல் ஜன.5ஆம் தேதிவரை சமூகத்தில் மதிப்பு, மரியாதை, செல்வம் ஆகியவை அதிகரிக்கும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.   

4 /8

ரிஷபம்: இந்தாண்டு உங்களுக்கு அடிபொலியாக தொடங்கப்போகிறது. நீங்கள் திட்டமிட்ட விஷயங்களில் முன்னோக்கிச் சென்றால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாகும். புது சொத்து அல்லது வீடு அல்லது வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புள்ளது.   

5 /8

துலாம்: புத்தாண்டின் முதல் வாரம் இவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். பல்வேறு சமூக செயல்பாடுகளுக்கான வாய்ப்பும் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி நிச்சயம். உங்கள் இணையருடன் அருமையான நேரத்தை செலவழிப்பீர்கள்.

6 /8

விருச்சிகம்: இந்த காலகட்டத்தில் உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இடம் அல்லது வீடு வாங்க வாய்ப்புள்ளது. மேலும், மனைவியுடன் இரண்டு மூன்று நாள்களுக்கு வெளியே செல்வீர்கள் அல்லது அவருக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பீர்கள். 

7 /8

தனுசு: கடந்தாண்டு உங்களுக்கு வரவேண்டிய பணம் இந்தாண்டு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். கடன் பிரச்னையை ஒழித்துக்கட்டுவார்கள். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். வணிகத்திலும் அதிக லாபம் கிடைக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.