3 நாட்களில் கஜகேசரி யோகம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜவாழ்க்கை... பண மழை!!

Gajakesari Yogam, Big Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம், பல முக்கிய கிரகங்கள் ராசிகளை மாற்றுவதுடன், சுப யோகத்தையும் ஏற்படுத்துகின்றன. 


2023 ஆகஸ்ட் 7 முதல் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது. சந்திரனும் குருவும் இணையும்போது கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் குரு மேஷ ராசியில் உள்ளார். மறுபுறம், ஆகஸ்ட் 7, 2023 அன்று, சந்திரனும் மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகும். கஜகேசரி யோகம் மிகவும் மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. கஜகேசரி ராஜயோகத்தின் பலனால் நன்மை பெறப்போகும் சில ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

மேஷத்தில் குரு: பல வித நல்ல பலன்களை அளிக்கும் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் உள்ளார். அவர் செப்டம்பர் மாதம் வக்ர பெயர்ச்சி அடைந்து மீனத்துக்கு மாறுவார்.

2 /8

மேஷத்திற்கு வரும் சந்திரன்: சந்திரன் எந்த ஒரு ராசியிலும் இரண்டரை நாட்கள் இருப்பார். ஆகஸ்ட் 7, 2023 அன்று, சந்திரனும் மேஷ ராசியில் நுழைகிறார். அங்கு ஏற்கனவே குரு இருக்கிறார்.    

3 /8

கஜகேசரி யோகம்: சந்திரனும் குருவும் இணையும்போது கஜகேசரி யோகம் உருவாகிறது. கஜகேசரி யோகம் மிகவும் மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. இது வலுவான பண பலன்களைத் தரும். மக்களுக்கு இந்த யோகத்தால் உயர் பதவி, முன்னேற்றம், மரியாதை மற்றும் செல்வம் அனைத்தும் வந்து சேரும்.   

4 /8

ராசிகளில் தாக்கம் : கஜகேசரி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் மிகவும் சுபமாகவும் அதிக நற்பலன்களை அளிக்கக்கூடியதாகவும் அமையப் போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார 3 ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

5 /8

மேஷம்: மேஷ ராசியிலேயே வியாழனும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகி இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பதவி, கௌரவம் கிடைக்கும். பணம் கிடைக்கும். சம்பளம் கூடும். புதிய வேலை கிடைக்கலாம். 

6 /8

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் நல்ல பலன்களைத் தரும். சில பெரிய வேலைகளில் வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். வியாபாரம் வளரும்.   

7 /8

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஆகஸ்ட் 7 முதல் இவர்களுக்கு பணம் வருவதற்கான முழு வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சட்ட விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.