பிக்பாஸிற்கு பிறகு மீட்டிங் போட்ட Maya Squad! வைரலாகும் புகைப்படங்கள்..

Bigg Boss 7 Tamil Contestants: சமீபத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான போட்டியாளர்கள், நிகழ்ச்சி முடிந்த பிறகு சந்தித்துக்கொண்டனர். அப்போது அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

 

Bigg Boss 7 Tamil: கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பித்து, 106 நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் முடிவடைந்தது. இதில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த விஜே அர்ச்சனா, டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த பிக்பாஸ் போட்டியில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளர்களாக பலர் இருந்தனர். அதிலும் இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட மாயா முதலில் மக்கள் மத்தியில் டாக்ஸிக் என பெயரெடுத்து பின்னர் இதயங்களை கவர்ந்தார். இந்த நிலையில், இவர், பிக்பாஸ் இல்லத்திற்குள் தன்னுடன் நட்புணர்வுடன் பழகியவர்களை வெளியிலும் சந்தித்துள்ளார். அப்படி சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

1 /7

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த போட்டியாளராக இருந்தவர், மாயா. துணை நடிகையான இவர் விக்ரம், லியோ, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த போது இவருக்கு பெரிதாக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கடைசி வாரங்களில் மாயாவினால் ஈர்க்கப்பட்ட பலர் அவரை இரண்டாவது ரன்னர்-அப் ஆக வர வைத்தனர். 

2 /7

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி முடிவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அந்த இல்லத்தில் இருந்து சரவண விக்ரம், ஜோவிகா, அக்‌ஷயா உள்ளிட்டோர் வெளியேறினர். நிகழ்ச்சியில் நண்பர்களாக இருந்த இவர்கள், எவிக்ட் ஆன பின்பும் நட்புடனேயே பழகி வருகின்றனர். 

3 /7

இந்த பிக்பாஸ் சீசனில் மக்களின் கவனத்தை தங்களது நட்பால் அதிகம் ஈர்த்தவர்கள்தான் மாயாவும் பூர்ணிமாவும். இந்த சீசன் முடிந்து பல வருடங்கள் ஆனாலும், இவர்களின் நட்பு மட்டும் பல வருடங்களுக்கு பேசப்படும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். 

4 /7

மாயா இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை பெற்றவுடன், ‘எதை சம்பாதித்தேனோ இல்லையோ..நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன்’ என்று விழா மேடையில் கூறினார். அதன் பிறகு இந்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். 

5 /7

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளதை அடுத்து, மாயாவும் அவரது சகோதரி ஸ்வாகதாவும் வனிதா விஜயகுமார், ஜோவிகா உள்ளிட்டோரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர்.

6 /7

மாயா, வெளியில் மீட்டிங் போடுவதை பற்றி ஏற்கனவே பிக்பாஸ் இல்லத்தில் பேசினார். சொன்னது போலவே அவர்களை வெளியில் சந்தித்தும் இருக்கிறார். 

7 /7

வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.