ஐபோன் யூசர்களே உடனே இந்த செட்டிங்ஸ் மாத்திடுங்க..!

உங்களது ஐபோனில் (iPhone) இந்த செட்டிங்க்ஸை மட்டும் மாற்றினால் பேட்டரியின் ஆயுட்காலம் நீடிக்கும்.

 

1 /7

iPhone பயனர்களின் பல நாள் குறை என்பது பேட்டரியின் செயல்பாட்டை பற்றி தான் உள்ளது. அதுவும் நீண்ட நேரம் பேட்டரி நீடிப்பதில்லை என்று கூறி வருகின்றனர். இதனால் பேட்டரி லைஃப்-ஐ (Battery life) நீட்டிக்க அப்டேட் கண்டுபிடிக்கச் சொல்லி வருகின்றனர்.  

2 /7

இந்நிலையில், ஐபோனின் முன்னாள் ஊழியர் டைலர் மோர்கன் என்பவர் சில டிப்ஸ்களை நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார்.  

3 /7

முக்கியமாக பேட்டரி நீடிக்க வேண்டும் என்றால் பேட்டரியை 100% சார்ஜ் செய்யக்கூடாது (Don't charge your battery till 100%). அப்படி செய்தால் அதன் ஆயுட்காலம் பாதிக்கப்படும். இரவு முழுவதும் 100% சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். 80% சார்ஜ் செய்வதன் மூலம் உங்களது பேட்டரியின் ஆயுட்காலத்தை நீடிக்கலாம்  

4 /7

அடுத்து உங்களது பேக்ரௌன்ட் ஆக்டிவிட்டியை கன்ட்ரோல் (Background activity control) செய்ய வேண்டும். இது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க உதவும். இதற்கு Settings சென்று General > Background app refresh என்பதை தேர்வு செய்ய வேண்டும்.  

5 /7

app -களை Wifi அல்லது ஆப் ஓப்பனாக இருக்கும்போது மட்டுமே Update ஆகலாம் என்று Setting செய்தால் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்கும்.  

6 /7

செயல்பாட்டில் இல்லாத App -க்கு Location சார்ந்த சேவைகளை Disable செய்ய வேண்டும். இதற்கு Settings > Privacy and Security > Location Services சென்று எந்தெந்த ஆப்கள் எப்போது Location சேவையை பயன்படுத்தலாம் என்று மாற்ற வேண்டும்.  

7 /7

பயன்படுத்தாத ஹே சிரி (Hey, Siri) போன்ற செயல்பாடு மற்றும் Automatic updates-யை Disable செய்ய வேண்டும். Brightness குறைவாக வைப்பது மற்றும் Bluetooth Off செய்து வைப்பது போன்றவை பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும்