கல் உப்பு Vs. சால்ட்: எது உடலுக்கு நல்லது? மருத்துவர்களின் பதில் இதுதான்!

Celtic Salt Vs Powder Salt: பலர் தங்களது உணவில் கல் உப்பை சேர்த்துக்கொள்வதா தூள் உப்பினை சேர்த்துக்கொள்வதா என சந்தேகத்தில் இருப்பர். அதை இங்கு தீர்த்துக்கொள்ளலாம். 

Good Salt For Overall Well Being: ‘உப்பு இல்லாத உணவு குப்பையில்’ என பெரியவர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு, இந்திய உணவுகளில் உப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தூள் உப்பு கல் உப்பு ஆகியவற்றிற்கும் வித்தியாசம் உள்ளது. இதில், எது உடல் நலனுக்கு நல்லது என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை என்ன தெரியுமா? 

1 /7

கல் உப்பை ஆங்கிலத்தில் Celtic Sea Salt என்பார்கள். இது, கடலின் உப்பில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதற்கு இந்தியாவை பொறுத்தவரை பல வரலாறு சிறப்புகளும், ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படும். 

2 /7

கடல் ஆவி மூலம் தயாரிக்கப்படும் உப்பு, சாம்பல் நிறத்தில் இருக்கும். பின்னர் சுத்திகரிக்கப்பட்டு வரும் இந்த உப்பு, நம் வீட்டு சமையலறையில் வெள்ளை நிறத்தில் ஒரு பெட்டியி அமைந்திருக்கும். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் தனித்துவமான சுவையும் கூடும். 

3 /7

கல் உப்பு மட்டுமல்லாது, தூள் உப்பையும் பலர் பயன்படுத்துவர். இவை இரண்டையும் பயன்படுத்துவதால் சுவை ரீதியாகவும், பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. கல் உப்பை குறைவாக பயன்படுத்தினாலே உப்பின் சுவை தூக்கலாக இருக்கும். ஆனால், தூள் உப்பினை அதிகமாக உபயோகித்தால் மட்டுமே சுவை அதிகரிக்கும். 

4 /7

தூள் உப்பை, அதிகளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான கோளாறுகள், கால்சிய சத்துக்கள் இழப்பு உள்ளிட்டவை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

5 /7

தூள் உப்புடன் ஒப்பிடுகையில் கல் உப்பு, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காது என்பது மருத்துவர்களின் கூற்றாகவும் மருத்துவ ஆராய்ச்சிகளின் சான்றாகவும் உள்ளது. 

6 /7

கல் உப்பு, குறைவான பதப்படுத்தப்பட்ட தன்மை பொருந்தியதாக உள்ளது. இயற்கை ஈரப்பதம் மற்றும் தாதுக்களை இது பாதுகாக்கிறது. அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் கல் உப்பில் காணப்படுகின்றன. இதில், மெக்னீசியம் இருப்பதால், நம் உடல் தண்ணீரை விரைவாக உறிஞ்சும் தன்மையும் உள்ளது.

7 /7

சுவையையும் உடல் நலனுக்கு நன்மை பயக்கும் சத்துக்களையும் உள்ளடக்கிய கல் உப்பு, அனைவருடைய வீட்டின் சமையலில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது ஒவ்வொருவரின் உடலின் இயல்பும் வேறுபடும் என்பதால் மருத்துவரின் பரிந்துரைக்கு பிறகு கல் உப்பினை உபயோகிக்க வேண்டும்.