வாட்ஸ்அப் அக்கவுண்டை உடனே செக் பண்ணுங்க..!

வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் 69 லட்சம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது. 

 

1 /6

பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் திடீரென 69 லட்சம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது.   

2 /6

மோசமான கணக்குகள் என்கிற அடிப்படையில் 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.   

3 /6

அண்மையில்,வாட்ஸ்அப் தீம்களை விரும்பிய நேரத்தில் மாற்றம் செய்து கொள்வதிலிருந்து, விரும்பிய ஒருவரின் சாட்டை லாக் செய்து கொள்ளும் வசதி வரைக்கும் ஏகப்பட்ட அப்டேட்டுகள் கொடுத்தது.   

4 /6

அதேநேரத்தில், வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்களின் whatsapp கணக்குகள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டும் வருகிறது.  

5 /6

அதாவது, வாட்ஸ் அப் செயலியின் மூலமாக தவறான கருத்துக்களை பகிர்வது, பிற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் whatsapp கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.   

6 /6

அந்த வகையில், ஐடி விதிகள் 2021 இன் படி 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் பல்வேறு மோசமான புகாரின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.