PM கிசான் நிதியுதவித்தொகையை 6,000 ரூபாயிலிருந்து உயர்த்த மத்திய அரசு முடிவு..!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29’ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22-க்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார்.

  • Jan 16, 2021, 14:36 PM IST

கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் மோடி அரசு  வருவதால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு முன் ஒருபோதும் இல்லாத வகையில் முன்மாதிரியான மத்திய பட்ஜெட்டை வழங்க உள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார். 

1 /7

இதற்கிடையே, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நிதி உதவித்தொகையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 /7

தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ 2,000 என்ற மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது.

3 /7

மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மூன்று தவணைகளில் இந்த பணத்தை டெபாசிட் செய்கிறது. முதல் தவணை டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கும், இரண்டாவது ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கும் இடையே டெபாசிட் செய்யப்படுகிறது.

4 /7

பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட நிலம் வைத்திருக்கும் உழவர் குடும்பங்களுக்கும், விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் அரசாங்கம் வருமான ஆதரவை வழங்குகிறது. ஆனால் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படவில்லை.

5 /7

மத்திய அரசு ஏற்கனவே ஏழு தவணைகளை இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது. வேளாண் அமைச்சகத்தின்படி, இதுவரை 11 கோடி விவசாயிகள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தரவை அரசாங்கம் வைத்திருக்கிறது. பயனாளிகளின் பட்டியல் pmkisan.gov.in எனும் அரசு வலைதளத்தில் கிடைக்கிறது. 

6 /7

விவசாயிகளுக்கு உதவ பிரதமர் கிசான் லேண்ட்லைன் எண்களையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. பி.எம்-கிசான் ஹெல்ப்லைன் எண் 155261/1800115526 (கட்டணமில்லாது), 011-23381092 மூலம் விவசாயிகள் தொடர்புகொண்டு உதவியை பெறலாம். கடைசியாக டிசம்பர் 25’ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ 18,000 கோடியை இந்த திட்டத்தின் கீழ் வழங்கினார்.

7 /7

தற்போது இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை மத்திய அரசு அதிகரித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு நிச்சயம் பலன் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.