பூஜையின் போது ‘இவை’ தவறி விழுவது அபசகுனம்; கவனம் தேவை

பல நேரங்களில் பூஜையின் போது சில பொருட்கள் கையிலிருந்து நழுவி கீழே விழும்.  பூஜையின் போது சில பொருட்கள் தரையில் விழுந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சில பொருட்கள் கீழே விழுந்தால் அது மிகவும் அசுபமானது என்று கூறப்படுகிறது.

பல நேரங்களில் பூஜையின் போது சில பொருட்கள் கையிலிருந்து நழுவி கீழே விழும்.  பூஜையின் போது சில பொருட்கள் தரையில் விழுந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சில பொருட்கள் கீழே விழுந்தால் அது மிகவும் அசுபமானது என்று கூறப்படுகிறது.

1 /5

குங்குமம்: குங்குமம் என்றால் மங்களகரமானது மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னம் என்று கூறப்படுகிறது. ஒருவரின் கையில் குங்குமம் விழுந்தால், குடும்பத்திற்கோ அல்லது கணவருக்கோ ஏதாவது பிரச்சனை ஏற்படக் கூடும் என்று அர்த்தம். தரையில் விழுந்த குங்குமத்தை கால்களால் சுத்தம் செய்யக்கூடாது அல்லது விளக்குமாறு பயன்படுத்தக்கூடாது. சுத்தமான துணியால் எடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.  

2 /5

பிரசாதம்: பிரசாதம் தரையில் விழுந்தால், அது அசுபமானது. பிரசாதம் தரையில் விழுந்தால், உடனடியாக  அதை எடுத்து தண்ணீரில் வீச வேண்டும் அல்லது சாப்பிடும் வகையில் இருந்தால் உடனடியாக அதனை பயம்படுத்தவும். 

3 /5

நீர் நிரம்பிய கலசம் : வழிபாட்டிற்காக கலசத்தில் நீர் எடுத்துச் செல்லும்போது கையிலிருந்து தண்ணீர் விழுந்தால் அது அசுபமாக கருதப்படுகிறது. கலசத்திலிருந்து தண்ணீர் கீழே விழுகிறது என்றால் முன்னோர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். குடும்பத்தில் பிரச்னை ஏற்படும்.

4 /5

கடவுள் சிலை: ஜோதிட சாஸ்திரப்படி கடவுள் சிலையை சுத்தம் செய்யும் போது அல்லது தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கை தவறி கடவுள் சிலை விழுந்து உடைவது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மூத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

5 /5

விளக்கு: பூஜையின் போது கையிலிருந்து வழிபாட்டு விளக்கு தவறி விழுவது வரவிருக்கும் பிரச்சனையின் அறிகுறியாகும்.