Best Electric Scooters: ரூ. 50,000-க்குள் கிடைக்கும் மிகச்சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள்

Electric scooter under Rs 50000: வரவிருக்கும் காலம் மின்சார வாகனங்களுக்கானது. இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சந்தையில் மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக உள்ளது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், மலிவான மின்சார வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. அதிக பட்ஜட் முதல் குறைந்த பட்ஜட் வரை, அனைத்து விலை வரம்புகளிலும் மின்சார வாகனங்களை வாங்கலாம். 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் மலிவான மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /5

ஹீரோ எலக்ட்ரிக்கின் ஸ்கூட்டரான ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் எல்எக்ஸ் (Hero Electric flash LX) சுமார் 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்கூட்டராகும். நீங்கள் இதை ரூ. 46,640 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். முழு சார்ஜில், இது 50 கிமீ தூரம் வரையிலான பயணத்தை நிறைவு செய்கிறது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)  

2 /5

குறைந்த பட்ஜெட் மின்சார ஸ்கூட்டரில் ஆம்பியர் REO பிளஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது முழு சார்ஜில் 65 கிமீ வரை பயணிக்கும். இதன் விலை ரூ .44,990 ஆகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

3 /5

மின்சார வாகன தயாரிப்பாளர் கோமகியின் ஸ்கோர் கோமகி XGT KM வாகனமும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை சுமார் 45 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த வாகனம் முழு சார்ஜில் 80 கிமீ வரை பயணிக்கிறது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

4 /5

எவோலட்டின் மின்சார ஸ்கூட்டர்Evolet pony உங்கள் பட்ஜெட்டுக்குள் பொருந்தி இருக்கும். இந்த ஸ்கூட்டர், முழு சார்ஜில் 90 முதல் 120 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும். இதன் ஆரம்ப விலை ரூ .39,500 ஆகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

5 /5

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆப்டிமா எல்எக்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப விலை ரூ 51,440 ஆகும். முழு சார்ஜில் 50 கிமீ வரையிலான பயணத்தை இது நிறைவு செய்கிறது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)