இனி டேட்டா முடிந்தாலும் பிரச்னையில்லை... 23 ரூபாயில் நச் ரீசார்ஜ் திட்டம் - முழு விவரம்

Vodafone Idea Data Plan: வோடபோன் ஐடியா மலிவான டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், சிறப்பு டேட்டா திட்டம் ஒன்றையும் கொண்டு வருகிறது.

  • Nov 27, 2023, 09:45 AM IST

 


 

 

1 /7

வோடபோன் ஐடியா (Vi) இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். சந்தையில் முன்னணியில் வரும் வகையில் அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்க அதற்கேற்ற பல சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

2 /7

அந்த வகையில், வோடபோன் ஐடியா அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சிறப்பு திட்டம் ஒன்றையும் கொண்டு வருகிறது.

3 /7

இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ.23. இந்த ரூ.23 திட்டத்தில் பயனர்கள் என்னென்ன நன்மைகளைப் பெறுவார்கள் என்பதை இதில் காணலாம்.   

4 /7

இது வோடபோன் ஐடியாவின் புதிய டேட்டா திட்டமாகும், இது பயனர்களின் கூடுதல் டேட்டா தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த ரூ.23 திட்டம் பயனர்களுக்கு 1.2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதன் வேலிடிட்டி ஒரு நாளாகும் (24 மணிநேரம்).    

5 /7

வோடபோன் ஐடியாவில் ரூ.19 டேட்டா திட்டம் ஏற்கனவே உள்ளது, இதில் பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா 24 மணிநேர வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. புதிய திட்டம் ரூ.4 கூடுதலாக செலுத்துவதன் மூலம் பயனர்களுக்கு 200MB கூடுதல் டேட்டாவை வழங்கப்படுகிறது.  

6 /7

ரூ.19 டேட்டா திட்டம், ரூ.23 டேட்டா திட்டம் போன்ற Addon திட்டங்களை பயன்படுத்த நீங்கள் அடிப்படை பிளானை கொண்டிருக்க வேண்டும்.

7 /7

இதுமட்டுமின்றி ரூ.24 சிறப்பு டேட்டா திட்டத்தையும் வோடபோன் ஐடியா கொண்டு வர உள்ளது. இதில் ஒரு மணிநேரத்தில் பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.