கம்மி விலையில் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் பெற சிறப்பு வாய்ப்பு!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் BSNL ஆகியவை தங்கள் பயனர்களுக்கு மிகவும் மலிவான விலையில் சிறந்த திட்டங்களை வழங்கியுள்ளன.

1 /5

புது டெல்லி: கொரோனாவின் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு மத்தியில் Work from Home முறை மீண்டும் தொடங்கியது. இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டி காரணமாக, நிறுவனங்கள் கம்மி விலையில் இணையத்தை வழங்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் BSNL ஆகியவை தங்கள் பயனர்களுக்கு மிகவும் மலிவான விலையில் சிறந்த திட்டங்களை வழங்கியுள்ளன. இதில் 20 ரூபாய்க்கும் குறைவான திட்டத்தை பற்றி நாம் காண உள்ளோம்.

2 /5

BSNL ப்ரீபெய்ட் திட்டம் 18 ரூபாய் நாட்டின் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL 18 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கியுள்ளது. அதன் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும். இதில், பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1 ஜிபி தரவு வழங்கப்படுகிறது, அதாவது 2 நாட்களில், பயனர்களுக்கு 2 GB தரவு கிடைக்கும். அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

3 /5

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் 19 ரூபாய் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 19 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம். இதன் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும், மேலும் இதில் பயனர்களுக்கு 200MB தரவு வழங்கப்படுகிறது. இது வரம்பற்ற அழைப்பு வசதியைக் கொண்டுள்ளது.

4 /5

வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் 19 ரூபாய் வோடபோன் ஐடியாவின் மலிவான திட்டம் இது. இதில், பயனர்கள் 200MB தரவைப் பெறுகிறார்கள். அதன் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும். இதில், வரம்பற்ற அழைப்புக்கான வசதி வழங்கப்படுகிறது. இது தவிர, இதில் வேறு எந்த நன்மைகளும் இல்லை.

5 /5

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 11 ரூபாய் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான இந்த திட்டத்தை வழங்கியுள்ளது. இதில், 1 ஜிபி தரவு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் வேலிடிட்டி பயனர்களின் தற்போதைய திட்டத்தைப் பொறுத்தது.