குளிர்காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்து பாருங்கள்!

குளிர்காலத்தில் துவைத்த துணிகள் அவ்வளவு எளிதாக உலருவதில்லை. நீண்ட நேரம் ஈரத்துடன் இருந்தாலும் நாற்றம் வர தொடங்குகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

குளிர்காலத்தில் அதிக சூரிய ஒளி இல்லாததால், துவைத்த துணிகள் காய்வதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. அதுவரை துணிகள் ஈரமாக இருக்கும். இந்த சமயத்தில் துணிகளை காய வைக்க சில எளிய வழிகள் உள்ளன.

2 /6

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிக குளிர் இருக்கும். மேலும் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யும்.

3 /6

இந்த சமயத்தில் துணிகளை துவைத்து காய வைப்பது என்பது கடினமான காரியம். அதிலும் கனமான துணிகள் காய்வதற்கு 1 வாரம் கூட எடுத்து கொள்கின்றன.

4 /6

இரும்பு மூலம் துணிகளை உலர்த்த முடியும். முதலில் பருத்தி துணியை விரித்து, அதில் ஈரமான ஆடைகளை வைக்கவும். பிறகு அதன் மேல் பருத்தி துணியை போத்தி, பின்னர் இரும்பை வைக்கவும். இதன் மூலம் துணிகள் காயும்.

5 /6

ஈரமான துணிகளை காய வைப்பதற்கு ஏசியில் உள்ள ஹீட்டரை பயன்படுத்தலாம். ஈரமான துணிகளை ஏசியின் கீழ் வைத்துவிட்டு ஹீட்டை ஆன் செய்யவும். சில மணி நேரங்களில் துணிகளில் உள்ள ஈரம் காணாமல் போகும்.  

6 /6

குளிர்காலத்தில் ஈரமான ஆடைகளை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையரை கூட பயன்படுத்தலாம். முடியை உலர்த்தும் ஹேர் ட்ரையரில் அதிக வெப்ப காற்று இருக்கும் என்பதால் துணிகளை எளிதில் உலர்த்தும்.