Ronaldo vs Messi: ரொனால்டாவா... மெஸ்ஸியா... யார் ஒஸ்தி - இதில் பாருங்க!

Ronaldo vs Messi: கால்பந்து விளையாட்டில் நவீன கால ஜாம்பவான்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் அறியப்படுகின்றனர். ரொனால்டோ ஆடவர் கால்பந்தில் அதிக முறை விளையாடிய வீர்ர என்ற பெருமையையும், மெஸ்ஸி தனது 800ஆவது கோலை நேற்றிரவு அடித்து சாதனை படைத்தனர். அவர்கள் வரலாற்றில் மீண்டும் தங்கள் பெயரை பதிந்துள்ளதால், இது ஒரு சாதனை இரவாக பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படத்தொகுப்பில், கிறிஸ்டியானோ ரொனால்டோ vs லியோனல் மெஸ்ஸி இருவரின் ஒப்பீடை காணலாம். 

 

 

 

 

1 /6

லியோனல் மெஸ்ஸியை விட கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக கிளப் கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோ 710 கிளப் கோல்களை அடித்துள்ளார். மெஸ்ஸி 701 கோல்களை அடித்துள்ளார்.

2 /6

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 140 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனை ஒப்பிடுகையில், லியோனல் மெஸ்ஸி சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 129 கோல்களை மட்டுமே அடித்துள்ளார்.  

3 /6

லியோனல் மெஸ்ஸியை விட கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோ ஒரு கோலுக்கு 113 நிமிடங்கள் என்ற விகிதத்தில் மொத்தம் 830 கோல்களை அடித்துள்ளார். மெஸ்ஸி ஒரு கோலுக்கு 104 நிமிடங்கள் என 800 கோல்களை அடித்துள்ளார்.

4 /6

கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட லியோனல் மெஸ்ஸி அதிக பலோன் டி'ஓர் பட்டங்களை வென்றுள்ளார். மெஸ்சி 7 முறை வென்ற நிலையில், ரொனால்டோ 5 முறை மட்டுமே வென்றுள்ளார்.

5 /6

கடந்த ஆண்டு பிபா உலகக் கோப்பை கிரீடம் உட்பட கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஒப்பிடும்போது லியோனல் மெஸ்ஸி கிளப்புகள் மற்றும் சொந்த நாட்டுக்காக, அதிக பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோவின் 22 பட்டங்களுடன் ஒப்பிடுகையில் மெஸ்ஸி 29 பட்டங்களை வென்றுள்ளார்.

6 /6

பிபா உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த கோல்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட லியோனல் மெஸ்ஸி முன்னிலை பெற்றுள்ளார். மெஸ்ஸி 26 போட்டிகளில் 13 முறை அடித்துள்ளார், ரொனால்டோ 22 போட்டிகளில் 8 கோல்களை மட்டுமே அடித்துள்ளார்.