கே.எல். ராகுல் மாதிரி இல்ல... புது மாப்பிள்ளை அக்சர் படேல் செய்த காரியம்!

புதிதாக திருமணமாகிய கிரிக்கெட் வீரர்களான கேஎல் ராகுல், ஹரிஸ் ரவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோருடன் அக்சர் படேலும் இணைந்துள்ளார். அக்சர் திருமணத்தின் சில அழகான புகைப்படங்களை வெளியிட்டார். அவற்றை இதில் பார்க்கலாம்.

  • Jan 29, 2023, 12:59 PM IST

குஜராத்தின் வதோதரா நகரில் மேஹா படேலை ஜன. 26ஆம் தேதி அன்று அக்சர் படேல் திருமணம் செய்து கொண்டார். இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு, மேஹாவுக்கும் சுமார் ஒரு வருடத்திற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 

 

 

 

1 /4

அக்சர், திருமணத்தில் ஸ்டைலிஷாக இருந்தார். அவர் மணமகனாக என்ட்ரி கொடுத்தபோது, பார்வையாளர்கள் பெரும் ஆரவார ஒலி எழுப்பினர். 

2 /4

மேஹாவும் அக்சரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் பொருட்டு, கடந்த ஆண்டு, ஜனவரி 20ஆம் தேதி, அக்சரின் பிறந்தநாளில் நிச்சயதார்த்தம் நடந்தது. சுமார் ஒரு வருடம் கழித்து தற்போது திருமணம் நடைபெற்றது.   

3 /4

இரண்டு நாட்களுக்கு முன்பு அக்சர் மேஹாவை திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. வீடியோவில், அக்சர் படேல் தனது ஜோடியுடன் ஒரு பாலிவுட் பாடலின் ட்யூனுக்கு நடனமாடுவதை காணலாம்.  

4 /4

கே.எல். ராகுல் மற்றும் அதியா ஷெட்டியைப் போல் இல்லாமல், அக்ஸரும் மேஹாவும் திருமணமான மூன்றாவது நாளில்தான் தங்கள் திருமணத்தின் படங்களைப் பகிர்ந்து கொண்டனர். கே.எல். ராகுல் திருமண புகைப்படங்கள் அவர்களின் திருமணத்தன்றே வெளியானது. பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கு தயாராவதற்காக அக்சர் படேல் மும்பைக்குச் செல்வதால், தம்பதியருக்கு தேனிலவு இருக்காது. மேஹாவும் விரைவில் தனது வேலைக்குத் திரும்புவார். அவர் ஒரு தொழில்முறை உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.

You May Like

Sponsored by Taboola