ஜனவரியில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு நன்மைகள், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Budhan Peyarchi Palangal: ஜனவரி மாதம் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. புதனின் இரு பெயர்ச்சிகள் இந்த மாதத்தில் உள்ளன. ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். மீண்டும் அவர் ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆவார். 

Budhaditya Yogam: ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். ஒன்பது கிரகங்களின் அரசனான சூரியன் இந்த ராசியில் இருப்பதால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. ஜனவரி 14-ம் தேதி சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆவார். 24 ஆம் தேதி புதனும் மகர ராசிக்குள் நுழைகிறார். அப்போது மீண்டும் மகரத்தில் புத ஆதித்ய (Budhaditya Yogam) யோகம் உருவாகும். இந்த இரு புதன் பெயர்ச்சிகளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /10

புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும் புத ஆதித்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் தடைபட்டிருந்த பணிகள் பல வெற்றிகரமாக நடந்துமுடியும். இந்த காலத்தில் அனைத்தும் சாதகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /10

மேஷம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இது தவிர, இந்த காலகட்டத்தில் நல்ல நிதி நன்மைகளையும் பெறலாம். ஆன்மீக காரியங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும்.  

3 /10

மிதுனம்: புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். தந்தையின் உதவியால் பல பணிகள் முடியும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் பணத்தை செலவழிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவ தயாராக இருங்கள். உங்கள் குழந்தைகளின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். வெளியூர் பயணமும் கைகூடும்.

4 /10

சிம்மம்: புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வர்த்தகம் அல்லது பங்குச் சந்தை தொடர்பான பணிகளைச் செய்தால் நன்மைகளைப் பெறலாம். பணியிடத்தில் அதிருப்தி உள்ளவர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு திருப்தி அடைவீர்கள். பண வரவு அதிகமாகலாம்.

5 /10

கன்னி: புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

6 /10

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகத்தின் தாக்கத்தால் பணி இடத்தில் பதவி, சமூகத்தில் கௌரவம் கூடும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு உங்கள் மேல் அதிகாரி மற்றும் சக ஊழியர்களால் பாராட்டப்படும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் பேச்சாற்றல் மூலம் உங்கள் எதிரிகளை சமாளிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் உயர்வு ஏற்படும். லாபம் அதிகரிக்கும்.

7 /10

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனைவியுடன் உறவு வலுவடையும். இந்த காலகட்டத்தில் மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும். நன்கு யோசித்து எடுத்த திட்டங்கள் வெற்றி பெறும். பண வரவு அதிகமாகும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம்.

8 /10

கும்பம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் பல நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த காலகட்டத்தில் நடக்கும். ஆளுமை மேம்படும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்கும். உறவுகள் வலுப்பெறலாம்.

9 /10

பேச்சாற்றல், தர்க்கம், நுண்ணறிவு, தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கும் காரணி கிரகமாக புதன் இருக்கிறார். புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை நன்றாக இருந்தால் அதிக சுப பலன்கள் கிடைக்கும். புதனின் அருள் பெற்றவர்கள் புத்திசாலிகளாக இருப்பதோடு வாழ்வில் பல வித வெற்றிகளையும் பெறுகிறார்கள்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.