ஜனவரி 30 கும்பத்தில் சனி அஸ்தமனம், இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

ஜனவரி 30 சனி அஸ்தமனம்: ஜனவரி 30, 2023 அன்று சனிபகவான் கும்ப ராசியில் அஸ்தமனம் அடைவார். இதனால் சில ராசியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். சில நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

 

1 /12

மேஷ ராசி: சமூக உறவுகள் மற்றும் பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். தற்போதைய பணியிடத்தில் சக ஊழியர்களுடன் உறவு மோசமடைய வாய்ப்பு உள்ளது.  

2 /12

ரிஷப ராசி: தொழில் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எதிர்பார்க்கும் வளர்ச்சி தாமதமாகலாம். மேலதிகாரி அல்லது உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.   

3 /12

மிதுன ராசி: சனிபகவானின் பிற்போக்கு நிலையில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தந்தையின் உடல்நிலை மோசமடையலாம். உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்தவும்.   

4 /12

கடக ராசி: உறவினர்களுடன் உறவில் மனக்கசப்பு ஏற்படும். திடீர் லாபம் அல்லது நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும. செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.  

5 /12

சிம்ம ராசி: காதல் விவகாரம் அல்லது தொழில் பங்குதாரருடன் சிறு தகராறு ஏற்படலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதிய முடிவை எடுக்கும் முன் கவனமாக எடுங்கள்.  

6 /12

கன்னி ராசி: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நீங்கள் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள் ஆனால் வெற்றி கிடைக்காது.  

7 /12

துலாம் ராசி: குழந்தைகளுடனான உறவிலும் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். நட்பு மற்றும் சமூக உறவுகளிலும் பிரச்சினைகள் இருக்கலாம்.   

8 /12

விருச்சிக ராசி: ஆரோக்கியமும் குறையலாம். நீங்கள் சொத்து வாங்க திட்டமிட்டால் கவனமாக இருங்கள். மோசடிக்கு பலியாகலாம்.  

9 /12

தனுசு ராசி: இந்த ராசிக்காரர்கள் பணி தொடர்பான பயணங்களின் போது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் பயணம் மேற்கொள்ளும் நோக்கம் வெற்றியடையாமல் போகலாம். மன அமைதிக்காக ஆன்மீக பயணம் மேற்கொள்ளலாம். உடன்பிறந்தவர்களுடனான உறவில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.  

10 /12

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவான் செல்வம், குடும்பம், பேச்சு வீடு என இரண்டாமிடத்தில் அமைவார். குடும்ப வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். குடும்ப தகராறு அதிகரிக்கலாம். நிதி இழப்பும் ஏற்படலாம்.   

11 /12

கும்ப ராசி: உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படும். திருமணத்தில் பிரச்சனைகள் வரலாம். தொழில் ரீதியாக, வேலை செய்பவர்கள் பணியிடத்தில் அதிக வேலை அழுத்தத்தை உணரலாம்.   

12 /12

மீன ராசி: பொருளாதார இழப்பு ஏற்படலாம். கடன் சுமை அதிகரிக்கலாம். சம்பள உயர்வு இல்லாததால் மன அழுத்தம் இருக்கும். நீங்கள் பல சிரமங்களை கடந்து செல்வீர்கள், ஆன்மீகத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

You May Like

Sponsored by Taboola