Male Fertility: ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மை அதிகரிக்கவும், விந்தணு எண்ணிக்கை தரம் மேம்படவும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு தான் ஆண்களில் பாலியல் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு காரணமாக ஆண்களுக்கு உடல் பலவீனமடைந்து, தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் ஆரோக்கிய மற்ற உணவு பழக்கம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை.
திருமண வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாட்டினை கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பிட்ட சில சிறப்பு உணவுகளை டயடில் சேர்ப்பதன் மூலம் ஆண்கள் உடல் வலிகை பெற்று, ஆண்மை பிரச்சனை நீங்கும்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல உணவுகள் உள்ளன. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டும் சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், மண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்கிறார்.
பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க உதவும்.
பேரீச்சம்பழம்: இரும்பு சத்துக்கள் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து இரவில் சாப்பிடுவதால் பாலுணர்வு அதிகரிக்கும். தினமும் 100 கிராம் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
வயாகராவிற்கு இணையாக செயல்படும் மாதுளை பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மாதுளம் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், மன அழுத்தத்தைக் குறைக்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
நெல்லிக்காய் என்னும் ஆம்லா உட்கொள்வது ஆண்மை தன்மையை அதிகரிப்பதோடு, கண்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். தாம்பத்திய வாழ்க்கையை மேம்படுத்த நெல்லிக்காய் பொடியில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் இருவேளை சாப்பிடவும்.
வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டுமே ஆண்மை தன்மையை அதிகரிப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு சாப்பிடுவது நன்மை பயக்கும். இது தவிர, வெள்ளை வெங்காயத்தை உட்கொள்வது மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
புரதச்சத்தின் களஞ்சியமாக கருதப்படும் இந்த காளான், சைவ - அசைவ பிரியர்கள் இருவருக்கும் பிடித்த ஒரு உணவு. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றும் என்சைம் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த காளான் உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.