Curry Leaves Benefits: கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை  பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. எனவே இந்த தொகுப்பில் கறிவேப்பிலையின் நன்மைகள் எனவென்று பார்போம்.

1 /5

1. ஆரோக்கியமான இதயம் கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாப்பு தரும்.

2 /5

2. சர்க்கரை நோய் கட்டுப்பாடு சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

3 /5

3. செரிமான மண்டலத்திற்கு நல்லது கறிவேப்பிலை இலைகள் செரிமானத்தை எளிதாக்கும். இந்தக் கறிவேப்பிலை இலைகள் முறையாகக் கொழுப்பினை உறிஞ்சுவதற்கு உதவி செய்கின்றன. மேலும் செரிமானத்தை எளிதாக்குவதால் உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடையை இழக்க கறிவேப்பிலை உதவுகிறது.

4 /5

4. எடை இழப்பு உடல் எடையை குறைக்க, கடினமான உணவை நாட வேண்டிய அவசியமில்லை. உடல் எடையை குறைக்க சிறந்த வழி ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாகும். கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவுகிறது, மேலும் உணவின் சுவையை அதிகரிக்கும் மற்றும் நறுமணத்தை அதிகரிக்கும். 

5 /5

5. வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் 15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும். இல்லையெனில் 30 இலைகளை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட வயிற்றுபோக்கு சரியாகும்.