விஜய்யை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்! சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியது!

மதராசபட்டினம், தெய்வ திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

 

1 /4

திரை பிரபலங்கள் பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வரும் நிலையில் தற்போது இயக்குனர் விஜய்க்கு அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.  

2 /4

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் கோல்டன் விசாவை பெற்றவர் நடிகர் பார்த்திபன் தான், இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது.  

3 /4

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் விஜய்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது.  

4 /4

இதுவரை திரிஷா, ராய் லட்சுமி, நாசர், ரஹ்மான், வெங்கட் பிரபு, கமல்ஹாசன் மற்றும் அமலா பால் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி சிறப்பித்துள்ளது.