மகளிருக்கான ட்ரெண்டிங் ஆடைகள்! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் வாங்கலாம்?

Diwali 2024 Trending Dress Collection For Women : பெண்கள், இந்த தீபாவளிக்கு எந்த மாதிரி ஆடை வாங்கி உடுத்தலாம்? இதோ அதற்கான லிஸ்ட்!

Diwali 2024 Trending Dress Collection For Women : ஆண்கள்-பெண்கள் என அனைவருக்குமே தீபாவளி என்ற ஒன்று வந்துவிட்டால் ஒரே குஷிதான்! விதவிதமான பலகாரங்களை சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து, உறவினர்களை சந்தித்து மகிழலாம் என்பதை தாண்டி, புதுப்புது ஆடைகளை வாங்கலாம் என்பதும் நம் மகிழ்ச்சிக்கு பெரிய காரணமாக அமையலாம். இந்த வருடத்தின் தீபாவளி, வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக, பெண்களுக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள், எந்த மாதிரியான ஆடைகளை இந்த வருட தீபாவளிக்கு வாங்கலாம்? வாங்க இங்க பார்க்கலாம்! 

1 /8

Shahara Set: ஒரு குர்த்தாவுடன் பெரிய பேண்ட் கொண்ட ஆடைக்கு பெயர், சஹாரா. ஸ்டைலாகவும், அதே சமயத்தில் உங்களுக்கு சௌகரியமாகவும் இருக்க, இந்த வகை ஆடையை வாங்கலாம்.

2 /8

புடவை: எந்த காலத்தில் எவ்வளவு ட்ரெண்ட் மாறினாலும், எப்போதும் மாறாமல் இருக்கும் ட்ரெண்ட், புடவை கட்டுவதுதான். உங்களுக்கு பிடித்த வகையில் இந்த தீபாவளிக்கு புடவை வாங்கி மகிழலாம். 

3 /8

லெஹங்கா: லெங்காவிலேயே இப்போது சோலி வகை ஆடைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இது, தீபாவளி பண்டிகைக்கு ஏற்ற பிரம்மாண்டமான உடையாகும்.

4 /8

குர்த்தா: பலாசோ வகை பேண்ட் உடன், அல்லது சாதாரண ஜீன்ஸ் பேண்ட் உடன் ஒரு குர்த்தா டாப்பை அணிந்தால் பார்ப்பதற்கு ட்ரெண்டியாகவும் அழகாகவும் இருக்கும்.

5 /8

கஃப்தான்: கஃப்தான் வகை ஆடைகள், பல வண்ணங்களை அடக்கிய பிரம்மாண்டமான ஆடையாக இருக்கிறது. ஸ்டைலான ஆடைகளை விரும்பும் ஆட்கள் இந்த ஆடையை அணியலாம்.

6 /8

இண்டோ வெஸ்டர்ன் : கொஞ்சம் ஃபேஷன், கொஞ்சம் கலாச்சாரம் கலந்த உடைதான் இண்டோ-வெஸ்டர்ன் ஆடை. 

7 /8

கவுன்: சம்கி, கற்கள் பதித்த பெரிய கவுனை வாங்கலாம். இவை, பண்டிகை காலங்களுக்கு ஏற்ற ஆடைகளாக அறியப்படுகின்றன. 

8 /8

அனார்க்கலி: அனார்க்கலி ஆடை, பழங்காலத்தில் இருந்து உடுத்தப்பட்டு வருகிறது. இதனை வரும் தீபாவளிக்கு போட்டு அசத்தலாம்.