7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
7th Pay commission: ஜனவரி 2025 -க்கான டிஏவை மத்திய அரசு 3% உயர்த்தினால் சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% அதிகரித்தால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.540 உயரும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 உயரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை ஜனவரி 2025 இல் திருத்தம் செய்யப்படவுள்ளன. ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) அதிகரிக்கிறது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
பொதுவாக ஜனவரி மாத டிஏ அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதத்திலும், ஜூலை மாத டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் வெளியிடப்படும்.
ஜனவரி 2025 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் உயர்வு ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
இதுவரை ஜூலை முதல் அக்டோபர் வரையிலான தரவுகள் வந்திருக்கின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத தரவுகளும் வந்தவுடன் தான் இறுதி முடிவு செய்யப்படும்.
டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 2025 பிப்ரவரியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படலாம்.
ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியது. ஜூலை 2024 இல் டிஏ 3% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது மொத்த டிஏ மற்றும் டிஆர் 53 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் 2024 வரை, ஏஐசிபிஐ குறியீடு 144.5 என்று அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அகவிலைப்படி 55.05% ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் குறியீட்டு அளவு 145.3 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அகவிலைப்படி 56 சதவீதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு: ஜனவரி 2025 -க்கான டிஏவை மத்திய அரசு 3% உயர்த்தினால் சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய ஊழியர்களுக்கு தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% அதிகரித்தால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.540 உயரும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 உயரும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.