கணவன், மனைவி இந்த ரகசியங்களை யாரிடமும் சொல்லக்கூடாது...

Relationship Tips: திருமண வாழ்வில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லக்கூடாத ரகசியங்கள் சில உள்ளன. அவை குறித்து இங்கு விரிவாக காணலாம். 

  • Oct 01, 2024, 15:22 PM IST

திருமண உறவில் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் எவ்வித ரகசியமும் வைத்துக்கொள்ளக் கூடாது என கூறுவார்கள். ஆனால், கணவன், மனைவி இருவரும் சில ரகசியங்களை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருக்கும்போது திருமண விழாவில் தேவையற்ற குழப்பங்களோ, பிரச்னைகளோ ஏற்படாமல் தவிர்க்கலாம்.

 

1 /8

திருமண வாழ்வில், பார்ட்னர் வேறு, நண்பர்கள் வேறு. இருவரும் வாழ்க்கைக்கு முக்கியம் என்றாலும், இருவரையும் நீங்கள் சமநிலையுடன் நடத்த வேண்டும். அதாவது, சம அளவில் முக்கியத்துவம் வழங்கலாம்.   

2 /8

குறிப்பாக, உங்களின் நெருங்கிய நண்பரின் ரகசியம் குறித்தும் லைப் பார்ட்னர்களிடம் சொல்லக்கூடாது. அப்படி சொல்லும்போது நண்பரிடத்தில் உள்ள உறவு பாழாக வாய்ப்புள்ளது.   

3 /8

அதேபோன்று தான், திருமண வாழ்வில் உங்களுக்குள் இருக்கும் ரகசியங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்வது சரியாக இருக்காது. இது திருமண வாழ்வில் பிரச்னையை ஏற்படுத்தலாம். அந்த வகையில், திருமண வாழ்கை குறித்து இங்கு நெருங்கிய நண்பரிடம் கூட சொல்லக்கூடாத ரகசியங்களை இங்கு காணலாம்.   

4 /8

1. உங்களுக்குள் நடக்கும் சிறு சிறு வாக்குவாதங்கள், பிரச்னைகள் ஆகியவற்றின் ஆணிவேர் வரை நண்பர்களிடம் சொல்வது பிரச்னையாகும். உங்களின் திருமண வாழ்வில் உள்ள பிரச்னைகளை நண்பர்களிடம் தெரிவித்தால் அது உங்களை மேலும் பலவீனமாக உணர வைக்கலாம். 

5 /8

2. மாமியார் மருமகள் சண்டை குறித்து பேசாதீர்கள். அதாவது, லைப் பார்ட்னருக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பிரச்னைகளை பேசினால் நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டிய விஷயம் பொதுவெளிக்குள் வந்துவிடும். இதுவும் கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தலாம்.   

6 /8

3. தம்பதிகள் உங்களுக்குள் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நெருங்கிய நண்பர்களிடமும் கூட சொல்லாமல் இருப்பது நல்லது. இது உங்களின் நண்பருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் இதுகுறித்து நண்பர்களிடம் பேசியது தெரிந்தால் உங்கள் பார்ட்னருக்கும் வருத்தம் ஏற்படலாம்.   

7 /8

4. அதேபோன்று கட்டில் விஷயங்களையும் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்வது முறையாக இருக்காது. எனவே அதனை தவிர்ப்பது நல்லது.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வாசகர்களுக்கு தகவல் அளிக்க எழுதப்பட்டதாகும். பொதுவான கருத்துகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.