கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?

விஜய் - தரணி கூட்டணியில் உருவான கில்லி படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 

1 /5

கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. பல திரையரங்குகளில் 3வது வாரமாக ஹவுஸ் புல் காட்சிகளாக உள்ளன.  

2 /5

தரணி இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து இருந்த இந்த படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜானகி கணேஷ், தாமு, மயிலசாமி என பலர் நடித்து இருந்தனர்.    

3 /5

விஜய்யின் சினிமா வாழ்க்கையை மாற்றியதில் முக்கிய பங்கு கில்லி படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. படத்தில் இருந்த ஆக்சன் காட்சிகள், சண்டை காட்சிகள், கபடி காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.  

4 /5

கில்லி படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக பலருக்கும் படித்த நபராக இருந்தது பிரகாஷ் ராஜ் தான். ஹாய் செல்லம் என்று த்ரிஷாவை பார்த்து அவர் சொல்லும் ஒவ்வொரு டயலாக்கிற்கும் இன்றும் விசில் பறக்கிறது.  

5 /5

இந்நிலையில், பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் அவருக்கு முன்பு கிட்டத்தட்ட 8 பேரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். அதில் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜனும் ஒருவர் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.