சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம்... முழு ராசிபலன் இதோ

Sani Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். 

Sani Vakra Peyarchi: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் அவர் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைவார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். சனி வக்ர பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். பண விரயம் இருக்கும். பண வரவும் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிறு சிறு சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் ஏற்படக்கூடும். 

2 /13

ரிஷபம்: பண விஷயத்தில் ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்த்து முடிந்தவரை சேமிக்கவும். முகியமான முடிவுகளை மிகவும் யோசித்து எடுக்க வேண்டும். 

3 /13

மிதுனம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பயணத்தின் போது சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் சில பகைமையும் காணப்படும். சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க முயற்சிப்பது நல்லது. மற்றவர்களிடம் சரியான முறையிலும், பொறுமையாகவும் பேசுவது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

4 /13

கடகம்: குடும்பம் மற்றும் உணர்ச்சிகரமான விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் நிதி நிலை வலுவடையும். தெரியாத நபர்களிடம் ரகசிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு எதிர்காலத்தில் சிக்கலைத் தரலாம். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். 

5 /13

சிம்மம்: சனி பெயர்ச்ச்சியின் தாக்கத்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும். உறுதியுடனும் தைரியத்துடனும் பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். 

6 /13

கன்னி: சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக சில பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால், சற்று பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்துடன் கையாண்டால் பிரச்சனைகளை சமாளித்து விடலாம். பணி இடத்தில் நல்ல பெயர் இருக்கும். 

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். கோவத்தில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் அதிருப்தி இருக்கலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நிதானமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள்

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் முதலீடு தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் காண்பார்கள். பழைய மற்றும் புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அபரிமிதமான பண வரவு இருக்கும். 

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிக பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பல சமயங்களில் நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், உங்கள் முயற்சியில் பின்வாங்க வேண்டாம். 

11 /13

கும்பம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். செல்வம் அதிகரிக்கும். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். வக்கிர சனியின் தாக்கத்தால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும்.

12 /13

மீனம்: வீடு, வாகனம், மனை, கடை வாங்க கடன் கிடைக்காதவர்களுக்கு இப்போது எளிதில் கடன் கிடைக்கும். மீன ராசி மாணவர்களுக்கு, வக்ர சனியின் தாக்கத்தால் வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.