தயிர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு உன்னதமான பொருள், ஆனால் அவற்றை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறைகள் சில உண்டு.
மீன்-தயிர் இரண்டும் எதிரி, இதனை ஒன்றாக சாப்பிடக்கூடாது. தாவர புரோட்டீனும், விலங்கு புரோட்டீனும் ஒன்றாக சேரும்போது அஜீரண கோளாறு, வெண்குஷ்டம் போன்றவை ஏற்படும்.
எண்ணெயில் பொரித்த, வறுத்த பூரி, பரோட்டா போன்ற எண்ணெய் அதிகம் கலந்த உணவுப்பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பாதிப்பு ஏற்படும்.
மாம்பழம் சூடான உணவு, தயிர் குளிர்ச்சியான பொருள் அதனால் இவை இரண்டையும் ஒன்றாகி சாப்பிட்டால் தோல் சம்மந்தமான நோய்கள் வரும்.
பாலிலிருந்து தான் தயிர் பெறப்படுகிறது என்றாலும் தயிரையும், பாலையும் ஒன்றாக சாப்பிடும்போது வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.