நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..

Dry Fruits For Immunity Power : நம் உடலில் அடிக்கடி நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகும். இதை அதிகரிக்க சில உலர் பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?

Dry Fruits For Immunity Power : இந்தியர்களின் உணவு பழக்கம் என்பது ‘உணவே மருந்து’ என்பதாகும். இதனால்தான், நம் ஊரில் அதிகம் வயதானவர்களும் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். மக்களிடையே சமீப காலமாக ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது. நம்மில் பலர், அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவோம். இதற்கு காரணம் ஆயிரம் இருப்பினும், உடலில் நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பதுதான் அடிப்படை காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதை தவிர்க்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உலர் பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?

1 /8

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஹெல்தியான தினசரி உணவுகளை சாப்பிடுவதுடன் தினமும் உலர் பழங்கள் சிலவற்றை சாப்பிடுவதும் மிகவும் அவசியமாகும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

2 /8

வால்நட்ஸ்: வால்நட்ஸ், சூப்பர் உணவுகளுள் ஒன்றாகும். 100 கிராம் வால் நட்ஸில் 65 கிராம் கொழுப்பும், 587 கலோரிகளும் உள்ளது. இதில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி அம்லங்கள், மாக்னீசியம் மற்றும் இரும்பு சத்துகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

3 /8

உலர் கருப்பு திராட்சை: இந்தியாவில் செய்யப்படும் அதிகளவு இனிப்புகளில் உலர் கருப்பு திராட்சை இருப்பதை பார்த்திருப்போம். இது, உடலில் நல்ல சர்க்கரையை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் சருமமும் புத்துணர்ச்சி பெரும். 

4 /8

பிஸ்தா: 30 கிராம் பிஸ்தா பருப்பில், சுமார் 159 கலோரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது, உடலில் கொழுப்பு மற்றும் கெட்ட சத்துகள் சேராமல் பார்த்துக்கொள்ளுமாம்.

5 /8

உலர் அத்திப்பழம்: இந்த பழத்தில், கால்சியம், பொட்டாசியம், மாக்னீசியம் மற்றும் இரும்பு சத்துகள் ஆகியவை இருக்கின்றன. இதில் இருக்கும் ஃபைபர் சத்துகள் வயிறு சம்பந்தப்பட்ட செரிமான கோளாறுகளையும் நீக்க உதவலாம். 

6 /8

பேரிச்சம்பழம்: இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம். 100 கிராம் பேரிச்சம்பழத்தில் 60 முதல் 70 சதவிகிதம் இயற்கை சர்க்கரையும், 277 கலோரிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் வயிற்று பிரச்சனைகளை சமாளிக்க உதவும் உலர் பழங்களுள் ஒன்றாகும்.

7 /8

முந்திரி: ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்க உதவும் உணவு பொருட்களுள் ஒன்று, முந்திரி. 100 கிராம் முந்திரியில் 533 கலோரிகளுக்கும் மேல் இருக்கிறதாம். இதில் இருக்கும் பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் காப்பர் சத்துகள் உடலில் நோய் அண்டாமல் இருக்க உதவுமாம். 

8 /8

பாதாம்: 100 கிராம் பாதாமில் இருக்கும் கலோரிகளால் உடலில் ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்குமாம். அது மட்டுமன்றி, இது நினைவாற்றல் திறனையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.  (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)