Periods Cramps: மாதவிடாய் வலிக்கு சூப்பரான வீட்டு வைத்தியங்கள்

Periods Cramps: சிலருக்கு மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலி, தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகளும் ஏற்பட்டு அவர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, பல பெண்கள் வலி நிவாரணிகளை நாடுகின்றனர். ஆனால், வலி ​​நிவாரணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. மாதவிடாய் வலியிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை இன்று இந்த பதிவில் காணலாம். பக்க விளைவுகள் இல்லாத சில எளிய வழிகளைப் பற்றி காணலாம்.

1 /4

மாதவிடாயின் போது வயிற்றில் அதிக வலி இருந்தால், வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து,  பிழிந்து, அதை வைத்து வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம், ஹாட் வாட்டர் பேக் கொண்டும் இதை செய்யலாம். இதன் மூலம் கருப்பையின் தசைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. சூடான் நீரில் குளிப்பதும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். 

2 /4

மூலிகை தேநீர் மாதவிடாயின் போது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் பெண்கள் கண்டிப்பாக இஞ்சி போட்ட தேநீரை குடிப்பது நல்லது என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள். 

3 /4

தேங்காய் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் லினோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. இந்த எண்ணெயைக் கொண்டு அடிவயிற்றை மசாஜ் செய்வதால் நல்ல நிவாரணம் ஏற்படும். 

4 /4

பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதில்லை. மாதவிடாய் காலத்தில் லேசான உடற்பயிற்சி செய்வது வலியிலிருந்து பெரும் நிவாரணம் அளிக்கும் என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.