தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், அனைத்து வயதினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதனை கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் சரியான உணவைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகள், நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருய்க்கும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, உணவு முறையில் கவனம் செலுத்தினால், மெது மெதுவாக மருந்தின் அளவைக் குறைத்து, நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். இந்நிலையில், நீரிழிவை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட சில காய்கறிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பாகற்காய்: நீரிழிவு என்ற உடன் நமக்கு மனதில் தோன்று காய்கறி பாக்ற்காய். இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. பாகற்காயை தவிர வேறு சில காய்கறிகளும் நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.
குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட வெண்டைக்காய், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த காய்கறிகளில் ஒன்றூ. இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாகக் கீறி, அதனை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் பூசணியை எந்த கவலையும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் இறண்டுமே சிறந்தது தான். பூசணிக்காயில் ஏராளமான நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் பல நன்மைகளைப் பெறலாம்.
வெந்தயக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து. இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவை குணமாக்க உதவுகிறது. வெந்தயமும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் உணவில் குடைமிளகாயை சேர்த்துக் கொள்வது இரத்தச் சர்க்கரைக் குறைவைச் சமாளிக்க ஒரு சிறந்த வழியாகும். அனைத்து நிற குடைமிளகாய்களுமே நல்லது. அவை மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. எனவே அதிக இரத்த சர்க்கரை அளவு இருப்பவர்கள் தாராளமாக பயமின்றி சாப்பிடலாம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.