குறட்டையை அடியோடு போக்க சில வழிகள்... இதை பாருங்க!

Snoring Remedies: இரவில் நீங்கள் அதிகமாக குறட்டை விடுகிறீர்கள் என உங்கள் குடும்பத்தினர் புகார் சொல்லுகிறார்களா...? கவலைப்பட வேண்டாம். குறட்டை பிரச்சனையை தீர்க்க இங்கு கொடுக்கப்பட்ட வழிகளை பின்பற்றவும்.

  • Apr 28, 2023, 18:08 PM IST

 

 

 

 

1 /6

பெரும்பாலான மக்கள் தூங்கும் போது சுவாசத்துடன் உரத்த சத்தம் எழுப்புகிறார்கள். இதைத்தான் நாம் குறட்டை என்று அழைக்கிறோம். குறட்டை என்பது தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.

2 /6

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட பேரீச்சம்பழம் உதவுகிறது. அதுமட்டுமின்றி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மூக்கில் சில துளிகள் பெப்பர்மிண்ட் ஆயிலை இடவும்.  

3 /6

அதிக குறட்டை பிரச்சனை இருந்தால் இரவில் தூங்கும் போது மேலும் ஒரு தலையணையை பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் குறட்டை பிரச்சனை வராது.  

4 /6

நீங்கள் அதிகமாக குறட்டை விடுகிறீர்கள் என்றால் நீங்கள் உறங்கும் நிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறட்டை பிரச்சனையை தவிர்க்கலாம்.

5 /6

அதிக எடை காரணமாக குறட்டை பிரச்சனை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்களின் குறட்டை அதிகமாக ஏற்படுகிறது என்றால், உங்கள் எடையைக் குறைப்பது தான் தீர்வாகும்.   

6 /6

படுக்கைக்கு முன் மது அருந்துபவர்களுக்கு குறட்டை அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே, மது அருந்துபவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.