சார்ஜ் செய்யாமலேயே இனி சாலையில் ஓடும் மின்சார கார்கள்: முழு விவரம் இதோ

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்தியில், உலகம் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பு நன்கு மேம்படும் வரை, மின்சார கார்களை இயக்குவதில் அதிக சவால்கள் உள்ளன.

இதை மனதில் கொண்டு, சில மின்சார கார் உற்பத்தியாளர்கள் இப்போது மின்சார கார்களுக்கு சோலார் சார்ஜிங் அம்சத்தை சேர்க்கின்றனர். மின்சார வாகனங்கள் இந்திய கார் சந்தையில் அடி ஏடுத்து வைக்கும் அதே வேளையில், சூரிய சக்தியில் இயங்கும் மின்சார கார்கள் இப்போது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1 /5

மின்சார வாகனங்கள் இந்திய கார் சந்தையில் நுழையும் அதே வேலையில், ​​சர்வதேச சந்தையில் சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. மின்சார கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்கள் தேவை. இவை உடனடியாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. சார்ஜிங் உள்கட்டமைப்பு முழுமையாக மேன்மையடையாவிட்டால், மின்சார கார்களை ஓட்டுவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

2 /5

இதை மனதில் வைத்து, சில மின்சார கார் உற்பத்தியாளர்கள் இப்போது மின்சார கார்களில் சோலார் சார்ஜிங் அம்சத்தைச் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக கார் ஓட்டுனர்கள் கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் ஸ்டேஷன்களைச் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. உலகின் இரண்டு சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றுக்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் இவற்றை சாலைகளில் காண முடியும்.

3 /5

இந்த கார் சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்படுகிறது. காரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 1000 மைல்கள் அல்லது சுமார் 1,600 கிலோமீட்டர் வரை இவற்றை இயக்க முடியும். Aptera Paradigm-க்காக நிறுவனம் ப்ரீ ஆர்டர் சேலைத் துவக்கியது. அதில் இந்த கார் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக விற்கப்பட்டது.

4 /5

ஹம்பிள் ஒன் சோலார் கூரை, மின்சாரம் தயாரிக்கும் பக்க விளக்குகள், பியர்-டு-பியர் சார்ஜிங், மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் மற்றும் ஃபோல்ட் அவுட் சோலார் அரே விங்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றின் உதவியுடன், எஸ்யூவியின் பேட்டரி எளிதில் சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும்.

5 /5

Aptera Paradigm-ஐப் போலவே, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹம்பிள் மோட்டார்ஸ் எஸ்யூவி ஹம்பிள் ஒன்னை வடிவமைத்துள்ளது. இந்த காரும் சூரிய சக்தியால் இயக்கப்படுகிறது. இந்த காரின் கூரை உட்பட பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி இந்த கார் பேட்டரியை சார்ஜ் செய்கிறது.