நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம், அது உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால், அளவிற்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு தான். தேவையானதை விட அதிகமாக தூங்குவது ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் செரோடோனின் ஹார்மோன் நம் தூக்கம் மற்றும் விழித்திருக்கும் முறைகளை கட்டுப்படுத்துகிறது. நீங்கள் அதிகமாக தூங்கினால், அது செரோடோனின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது நரம்புகளை பாதிக்கலாம். இதன் காரணமாக தலைவலி ஏற்படலாம். மறுபுறம், நீங்கள் நீண்ட நேரம் தூங்கும்போது, திடீரென்று அதிக பசியும் தாகமும் ஏற்படும், இது தலைவலிக்கு வழிவகுக்கிறது.
நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருந்தால், முதுகு வலி பிரச்சனையால் அடிக்கடி அவதிப்படுவீர்கள். மெத்தையின் மோசமான தரமும் இதற்கு காரணமாக இருக்கலாம். மோசமான மெத்தையில் நீங்கள் நீண்ட நேரம் தூங்கினால், அது தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இதனால் நீண்ட நேரம் தூங்குவது முதுகுவலியை ஏற்படுத்துகிறது.
அதிகம் தூங்குவதுவதால், உங்கள் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். சரியான அளவில் தூக்கம் இல்லாததன் காரணமாக, மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
நீண்ட நேரம் தூங்கிய பிறகும், சிலர் நாள் முழுவதும் சோர்வாக உணர்வார்கள். இது அதிக தூக்கத்தின் பக்க விளைவு. அதிகப்படியான ஓய்வு காரணமாக, தசைகள் மற்றும் நரம்புகள் கடினமாகின்றன. இது ஒருவரை சோர்வடையச் செய்கிறது.
அதிக தூக்கம் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. இன்சுலின் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சோர்வாக உணருவதால், உடலில் ஆற்றல் குறைவதால், அதிக கலோரி கொண்ட பொருட்களை சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.