Maruti, Tata Motors, Toyota வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: இந்த சேவை நீட்டிக்கப்பட்டது

உங்களிடம் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் அல்லது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஆகிய கார்களில் ஏதாவது இருந்தால், இது உங்களுக்கான செய்தி. 

கொரோனா தொற்றுநோய் காரணமாக, இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இலவச சேவை மற்றும் உத்தரவாத காலத்தை நீட்டித்துள்ளன.

1 /4

கொரோனா லாக்டவுன் காரணமாக இலவச சேவை மற்றும் உத்தரவாதத்தை இதுவரை பயன்படுத்திக் கொள்ள முடியாத வாடிக்கையாளர்களுக்கு, இவற்றை பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்களிடமிருந்து இன்னும் சில நாட்கள் அளிக்கப்படும். இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதுவரை இந்த நிவாரணத்தை அளித்துள்ளன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.   

2 /4

வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு வாகனங்களின் இலவச சேவை மற்றும் உத்தரவாத காலத்தை நீட்டிப்பதாக மாருதி சுசுகி இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் பல இடங்களில் ஊரடங்கு உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை கருத்தில் கொண்டு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இலவச சேவை மற்றும் உத்தரவாதத்தில் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். நிறுவனம் இலவச சேவை மற்றும் உத்தரவாதத்தை 30 ஜூன் 2021 வரை நீட்டித்துள்ளது. கார் உத்தரவாதமும், இலவச சேவையும் 15 மார்ச் 2021 முதல் 31 மே 2021-க்குள் காலாவதியாகும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச சேவை மற்றும் உத்தரவாத காலத்திற்கான நீட்டிப்பு வழங்கப்படும்.  

3 /4

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ப்ரீ-பெய்ட் கட்டண சேவைகள் தொகுப்பையும் நீட்டித்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு உள்ள மாநிலங்களில், உத்தரவாதமும் இலவச சேவை காலமும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் இணைப்பு திட்டம் 2.0 இன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு இதன் பலன் கிடைக்கும். டொயோட்டா கிர்லோஸ்டர் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நவீன் சோனி ஒரு அறிக்கையில், வாடிக்கையாளர் இணைப்பு திட்டம் 2.0 -ன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ப சேவைகளை வழங்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்று கூறியுள்ளார்.  

4 /4

ஏப்ரல் 1 முதல் மே 31 வரை உத்தரவாதமும் இலவச சேவையும் நிலுவையில் உள்ள வாகனங்கள், இப்போது 2021 ஜூன் 30 வரை இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று டாடா மோட்டார்ஸ் மே 11 அன்று அறிவித்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை பராமரிக்க முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையை இலவசமாக வழங்க நிறுவனம் முடிவு செய்தது. இருப்பினும், உத்தரவாதத்தையும் இலவச சேவை காலத்தையும் (கிலோமீட்டரில் அல்ல) நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.