இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சந்திர கிரகணம் விசாக நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசியில் வைஷாக பூர்ணிமா அன்று நிகழும். இந்த நாளில் புத்த பூர்ணிமாவும் அரங்கேறயுள்ளது. புத்த பூர்ணிமா மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் பரிகம் யோகத்தில் நடக்கும். 80 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்க்கை உருவாகப் போகிறதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி 8 ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களுக்குப் பிறகு உருவாகும் இந்த சேயர்க்கையால் நான்கு ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 /4

கடகம் - கடக ராசிக்காரர்கள் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தகராறு ஏற்படலாம். இந்த கிரகணம் தொழில் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் நல்லதல்ல. செலவுகள் அதிகரிக்கலாம். பணத்தை சேமிப்பதில் சிரமங்கள் இருக்கலாம்.

2 /4

துலாம்- துலாம் ராசிக்காரர்கள் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கான அதிகப்படியான உற்சாகம் தீங்கு விளைவிக்கும். ஒருவரை கண்மூடித்தனமாக நம்புவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் பேச்சில் பொறுமை தேவை. கருத்து சொல்வதற்கு முன் யோசித்து சொல்லவும். 

3 /4

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பிரச்னைகள் அதிகரிக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தவறினால் பெரும் பாதிப்பு ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். நிதி சிக்கல்கள் ஏற்படலாம்.

4 /4

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நல்லதல்ல. உங்கள் ராசியின் அதிபதி சனிபகவான். இந்த ராசிக்காரர்கள் சனி தசையால் ஏற்கெனவே அவதிப்படுகிறார்கள். எனவே, கிரகண காலத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.   (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)