Food Combinations: ஆரோக்கியத்தை உறுதி செய்யும் உணவுகளை உண்பது அவசியம், நமது மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல உணவை உட்கொள்வது அவசியம்
பழங்கள், கீரைகள்: உணவில் ஏராளமான பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்றாலும், அவற்றை எந்த காம்பினேஷனில் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்
மேலும் படிக்க | Brain Foods: மூளையை ஜெட் வேகத்தில் இயங்க செய்யும் சில உணவுகள்!
தசை வளர்ச்சிக்கு, பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்களை தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் இன்சுலின் உள்ளது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் தயிரில் உள்ள கால்சியத்தை உறிஞ்சும் திறன், உங்கள் உடலின் திறனை அதிகரிக்கிறது.
காளான் மற்றும் எள் கலவை எலும்புகளை வலுப்படுத்த உதவும். நீங்கள் வைட்டமின் D ஐ உட்கொள்ளும்போது, உங்கள் உடலில் உள்ள அனைத்து உணவுகளிலிருந்தும் அதிக கால்சியத்தை உறிஞ்ச முடியும். காளானும், எள்ளும் இந்த ஊட்டச்சத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கான குடல் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.
வைட்டமின் சி, இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. கீரைகளை, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி மூலங்களுடன் எடுத்துக் கொள்ளும்போது பயனுள்ளதாக இருக்கும்.
கீரையை சிறிது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து சமைப்பது உடலின் ஒளி வேதிப்பொருட்களை உறிஞ்சும் தன்மையை மேம்படுத்துகிறது.
உங்கள் உணவில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடலாம். இது சிறந்த தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே பாதாம் பருப்பை என்றும் மறக்காதீர்கள்