நெஞ்சு சளியை கொள்ளும் ! கொள்ளு ரசம்..ஒருமுறை சாப்பிட்டால் விட மாட்டீர்கள் !!

நீண்ட நெஞ்சு சளிப்பிரச்சனைக்கு விடை கொடுக்கும் கொள்ளு ரசம் !   பொதுவாகச் சளியை இயற்கை முறையில் விரட்டினால் மீண்டும் நம்மிடம் நெருங்குவது குறைவாகிவிடும். அனைத்து வீட்டிலும் வாரத்திற்கு ஒருமுறையாவது ரசம் வைத்துச் சாப்பிட்டு வருவது இயல்பு. ஆனால் கொள்ளு ரசம் செய்வது சிறிது வித்தியாசம் அதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தினமும் சாப்பிடத் தொடங்குவீர்கள். மேலும் கொள்ளு ரசம் செய்யும் முறை மற்றும் நன்மையை இங்குப் பார்க்கவும்.

கொள்ளு ரசம் உடலின் நச்சுக்கிருமிகளை கொள்ளும் ரசம். உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து நச்சுக்கிருமிகள் மற்றும் நம்மை அறியாமல் வரும் தொற்றுகளிலிருந்து விடுபட இந்த கொள்ளு ரசத்தினை சாப்பிட்டுப் பாருங்கள். உங்களின் ருசி இந்த ரசத்தில் சேர்ந்துவிடும். கொள்ளு ரசம் செய்து முடித்தவுடன் பக்கத்துவீட்டுக் காரர்கள் நம்மிடம் வந்து என்ன ரசம் செய்தீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். அந்த அளவிற்கு அதன் நறுமணம் வீடு வாசல் வரை செல்லும்.  இந்த கொள்ளு ரசத்தினை செய்யும் முறை மற்றும் இதன் அதீத நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்ளவும்.

 

1 /9

தேவையான பொருட்கள் : குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேவையான சின்ன வெங்காயம் ,தக்காளி,கொத்தமல்லித்தழை,  கருவேப்பிலை, எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கொள்ளு, பூண்டு போன்றவை ரசத்திற்குத் தேவை. இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே நல்ல முறையில்  ரசம் வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும்.

2 /9

தக்காளி,  கருவேப்பிலை,  மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், கொள்ளு, கொத்தமல்லித்தழை போன்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அதன்பின் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு அரைத்ததை மொத்தமாக வேறொரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.  அரைத்த கலவையில் புளி கரைசலைச் சேர்த்து ஒன்றாகக் கலந்து விடவும். 

3 /9

புளி உங்கள் விருப்பத்திற்கேற்ப மிக்ஸியில் கொட்டையை எடுத்தபின் சேர்த்து அரைக்கலாம். இல்லையென்றால் தனியாகப் புளியைக் கரைத்துச் சேர்க்கலாம்.

4 /9

ஏற்கனவே அரைத்து வைத்த கலவையில் புளி சேர்த்து சிறிது நேரம் ஊரவிடவும். அதன்பின் அந்த  கரைசலில் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் தங்களின் சுத்தமான கைகளால் கரைக்கவும். 

5 /9

அடுப்பில் ரசம் வைப்பதற்கு உங்களின் தேவைக்கேற்ற பாத்திரத்தை வைக்கவும். அடுப்பை அதிக அணையில்லாமல் சிறிய அணையில் வைத்து முதலில் எண்ணெய் ஊற்றவும். காய்ந்த எண்ணெய்யில் சிறிதளவு கடுகு, கறிவேப்பிலை போட்டுக் கருகவிடாமல் லேசான பதத்தில் நன்கு தாளித்து விடவும்.   

6 /9

தாளித்தபின் உங்கள் தேவைக்கேற்ற நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து  நிறம் மாறி பச்சை வாசனைப் போகும்வரை வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசம் நீங்கிய பிறகு வதங்கிக்கொண்டிருக்கும்போதே சிறிதளவு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7 /9

தீயிடாமல் வெங்காயத்தை வதக்கவும், பின்னர் 5 நிமிடம் கழித்து  வதங்கிய வெங்காயத்தில் புளி கரைசலை ஊற்றி உப்பு காரம் சரி பார்த்து அதன்மேல் சிறிது நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி நன்றாக கொதி விட்டு இறக்கவும். 

8 /9

தேவையா அளவு ஒரு குவளையில் சாதம் எடுத்து அதைச் சிறிதளவு மிக்ஸில் அரைத்து அதனுடன் இந்த கொள்ளு ரசத்தைச் சேர்த்து மீண்டும் கொஞ்சமாக அரைத்துக் கொள்ளவும்.  பிறகு இதனை ஒரு கப் அல்லது டம்ளர் போன்றவற்றில் சாப்பிடலாம். அல்லது கஞ்சி போல் குடிக்கலாம்.

9 /9

இந்த கொள்ளு ரசம் சாப்பிட்டால் நெஞ்சி சளி  நீங்கி வெளியேறிவிடும். சிலர் நீண்ட நாள் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். நீங்கள் இந்த கொள்ளு ரசத்தை ஒருமுறை சாப்பிட்டுப் பயனடைந்தால் மீண்டும் உங்களுக்கு இது சாப்பிட  நினைப்பீர்கள். கொள்ளு ரசம் வார  2 அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.