400 கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் வீடு! வெளியான வேற லெவல் புகைப்படங்கள்!

Gautam Adani Net Worth: பிரபல தொழில் அதிபரான கௌதம் அதானி தங்கி இருக்கும் வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

1 /6

பிரபல தொழிலதிபரும் அதானி குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி 1962ல் குஜராத் மாநிலத்தில் பிறந்தார். இவர் நிலக்கரி வர்த்தகம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு என பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.  

2 /6

தொழிலதிபர் கௌதம் அதானிக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல சொத்துக்கள் உள்ளன. கடந்த மாதம் கவுதம் அதானி உலகின் 6வது பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார்.  

3 /6

அதானிக்கு பல சொத்துக்கள் இருந்தாலும் டெல்லியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். மேலும் குர்கானில் உள்ள காந்திநகர் பகுதியில் இவருக்கு ஆடம்பரமான சொகுசு பங்களா ஒன்று உள்ளது.   

4 /6

டெல்லியில் உள்ள லுடியன்ஸ் பகவான் தாஸ் சாலைக்கு அருகில் கவுதம் அதானியின் வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் 400 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

5 /6

இந்த வீடு 3.4 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இந்த ஆடம்பரமான பங்களாவில் 7 படுக்கையறைகள், 6 சாப்பாட்டு அறைகள் உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பணியாட்கள் தங்குவதற்கு தனியாக வீடும் உள்ளது.   

6 /6

டெல்லியில் உள்ள வீட்டை தவிர இவருக்கு அகமதாபாத்திலும் ஒரு பங்களா உள்ளது. மிதாகலி கிராசிங்கிற்கு அருகில் இந்த பங்களா அமைந்துள்ளது. இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளன.