இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பெரும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 /6

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2 /6

டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

3 /6

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

4 /6

"இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நவீனகால கிரிக்கெட்டிற்கு இவரை போன்ற ஒருவர் தேவை" என்று ஜெய் ஷா பதிவிட்டுள்ளார்.

5 /6

கம்பீர் தலைமையில் இந்திய அணி முதல் சுற்றுப்பயணமாக இலங்கை செல்ல உள்ளது. அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

6 /6

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட்டை விட அதிக சம்பளத்தை பெறுவார். ஆண்டுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.