Iron Rich Foods: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உகந்த இரும்பு சத்தினை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.
எலும்புகள் வலுவாக இருக்கவும், மூட்டுவலி, ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதில் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் ஆகும். பெரும்பாலான மக்கள் எலும்பு ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறார்கள். அது அவர்களின் நடுத்தர வயதில் பிரச்சனைஅக்ளை ஏற்படுத்துகின்றன. நமது உடலை வடிவமைக்கும் எலும்புகள், அத்தியாவசிய தாதுக்களை சேமிக்கின்றன. எலும்பு ஆரோக்கியமாக இருக்க இரும்புச்சத்து முக்கியமானது. எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைமுடி பாதிக்கப்படலாம். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஹீமோகுளோபின் குறைகிறது. இதன் காரணமாக, முடிக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காது, இதனால் முடி வலுவிழந்து உடையும். எனவே, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உடல் ஆரோக்கியத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியமான ஒரு தாதுவாகும். இது, உடல் முழுவதும் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை சுமந்து செல்ல உதவி புரிகிறது. இரும்புச்சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சருமம், தலைமுடி மற்றும் நகங்களுக்கும் பங்களிக்கிறது
அசைவ உணவுகளில் ஈரலில் 17.9% இரும்புச்சத்து உள்ளது. முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இரும்புச்சத்தை அதிகம் பெறுவதற்கு மாமிச உணவுகளில் ஈரலை சாப்பிடுவது பலனளிக்கும். உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலுப்படுத்த விரும்பினால், ஈரல் சரியான தேர்வாக இருக்கும்
பூசணி விதைகள் இரும்புச்சத்துக் கொண்ட பொக்கிஷம் ஆகும். இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் கே, துத்தநாகம் மற்றும் மாங்கனீஸின் நல்ல மூலமான பூசணி விதைகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. 1 அவுன்ஸ் பூசணி விதைகளில் 14% இரும்பு உள்ளது. எனவே பூசணி விதைகளை உட்கொள்வது எலும்புகளுக்கும் தலைமுடிக்குக்கும் நன்மை பயக்கும்.
டோஃபுவில் போதுமான அளவு புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன. 100 கிராமில் டோஃபூவில் 3.4 கிராம் இரும்புச்சத்து உள்ளது. டோஃபு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வது நிற்கும். அதிலுள்ள புரதம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். பாலில் இருந்து கிடைக்கும் பனீரைப் போலவே சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபுவும் உடலுக்கு நல்லது
ப்ரோக்கோலியில் 6 சதவீதம் இரும்புச்சத்து உள்ளது. அத்துடன் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட் உள்ளது. இவை அனைத்தும் எலும்புகள் வலுவாகவும், முடி வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ப்ரோக்கோலியில் உள்ள இரும்புச்சத்து தரமானது, இது எலும்புகளை வலுவாக்குவதுடன் முடி உதிர்வதைத் தடுக்கிறது. வைட்டமின் கே முடி அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் வைட்டமின் சி பொடுகை குறைக்க உதவுகிறது
கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்திக்கு மிகவும் அவசியமானது. கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது தவிர, கீரையில் இருந்து உடலுக்கு புரதம் கிடைக்கிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. கீரையை சமைத்தும் உண்ணலாம், சூப்பாக செய்து குடித்தாலும் இரும்புச்சத்து உடலுக்கு கிடைக்கும்.
இரும்பு சத்து குறைபாடு ஒரு பொதுவான பிரச்சனையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இது சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பாதிக்கிறது.