ஒரு வாரம் சின்ராச கையில பிடிக்க முடியாது... தூள் பறக்கும் பாக்ஸிங் டே போட்டிகள் - எப்படி பார்ப்பது?

பாக்ஸிங் டே ஆன நாளை (டிச. 26) இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காணலாம். 

  • Dec 25, 2023, 15:30 PM IST

 

 

 

 

 

1 /7

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 மற்றும் ஓடிஐ நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் நாளை (டிச. 26) தொடங்குகிறது.   

2 /7

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சென்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி டிச. 30ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுண் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் ஜன.3ஆம் தேதி முதல் ஜன. 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   

3 /7

இந்திய அணி ஸ்குவாட்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் , முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

4 /7

தென்னாப்பிரிக்கா அணி ஸ்குவார்ட்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பெர்கர், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டிஜார்ஜ், டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், லுங்கி பியர்ஸ், லுங்கி பியர்ஸ்.

5 /7

டி20 மற்றும் ஓடிஐ தொடரை போன்ற இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நீங்கள் பார்க்கலாம். Star Sports HD 1, Star Sports HD 2 சேனல்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நீங்கள் போட்டியை கண்டு ரசிக்கலாம். 

6 /7

மேலும், டிஸ்னி+ ஹார்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நீங்கள் போட்டியை நேரலையில் காணலாம். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நீங்கள் நேரலையில் காணலாம். இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். மேலும், முதல் நாள் அன்று டாஸ் மதியம் 1 மணிக்கு வீசப்படும் என தெரிகிறது.

7 /7

இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டி பாக்ஸிங் டே ஆன நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியை போன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஆப்பில் பார்க்கலாம்.