பணி நியமனம் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! அரசு ஆசிரியர்கள் அதிர்ச்சி!

Chennai High Court Question: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டீச்சர்ஸ் நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Appointment Government School Teacher: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் குற்றப்பின்னணி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப காரணம் என்ன? இது ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படுத்துமா? என்பது குறித்து பார்ப்போம்.

1 /10

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டீச்சர்ஸ் நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

2 /10

பொதுவாக வழக்கறிஞர்கள் ஆகட்டும், காவல்துறையினர் ஆகட்டும், இவர்களை நியமனம் செய்யும் போது, அவர்களின் குற்றப்பின்னணி குறித்து விசாரித்து பின்னர் பணி நியமனம் செய்யப்படும். அவர்களி போல குற்றப்பின்னணி விசாரித்து ஏன் ஆசிரியர் நியமனம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

3 /10

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் டெட் (TET) எக்ஸாம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கவர்மெண்ட் ஸ்கூல் ஆகட்டும் அல்லது கவர்மெண்ட்ஏடி ஸ்கூல் ஆகட்டும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு  வந்தார்கள்.

4 /10

இந்தநிலையில், டெட் எக்ஸாம் தேர்ச்சி பெற்றாலும், போட்டி தேர்வு மூலமாக தான் ஆசிரியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவார்கள் என கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆர்டர் பாஸ் பண்ணாங்க. 

5 /10

இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

6 /10

விசாரணையின் போது டீச்சர்ஸ்-க்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகள், எல்லாம் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் வெளியான செய்திகள் எல்லாம் சுட்டிக்காட்டி நீதிபதிகள், டீச்சர்ஸ் பணி நியமித்தின் போது அவர்களிடைய குற்றப் பின்னணியை ஏன் விசாரிக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்கள். மேலும் இந்த விவகாரம் சம்பந்தமாக தமிழக அரசு ஏன் ஒரு முடிவு எடுக்கக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

7 /10

உயர்நீதிமன்ற எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், "அரசு பணிக்காக தேர்வு செய்யப்படக்கூடிய டீச்சர்ஸ் உடைய குற்றப் பின்னணி மற்றும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பான விவரங்கள் கேட்கப்படுகின்றன" என விளக்கம் அளித்தார்.

8 /10

அதற்கு நீதிபதி, ஒரு வழக்கறிஞர் பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கு முன்பாக, அவங்களுடைய குற்றப் பின்னணியை போலீசார் மூலமா விசாரிக்கப்படுது. அதேபோல காவல்துறையிலும் பணியில் சேர்வதற்கு முன்பாகவே குற்றப் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது. அதுபோல ஏன் ஆசிரியர்கள் நியமனத்தின் போது விசாரிக்கக்கூடாது எனக் கேள்வி.

9 /10

அதாவது எதிர்கால தலைமுறையை நல்வழிப்படுத்தி அவங்களுடைய வாழ்க்கைக்கு அச்சாணியா திகழும் ஆசிரியர்களின் குற்றப் பின்னணியை குறித்து ஏன் போலீசார் மூலமா அவங்களுடைய பணி நியமனத்துக்கு முன்பாக விசாரிக்கக்கூடாதா? என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

10 /10

இந்த விவகாரத்தை முக்கியமா தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.