படுத்தி எடுக்கும் ராகுவால் கஷ்டப்பட்ட ராசிகளுக்கு புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட்! மகிழ்ச்சி!

Mercury-Rahu Conjunction: 15 ஆண்டுகளுக்குப் பின் சுப கிரகமான புதனுடன் அசுப கிரகமான ராகு இணையவிருக்கிறார். ஜோதிடத்தின்படி இந்த முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களின் இணைப்பு 12 ராசியினருக்கும் பல்வேறுவிதமான பலன்களை ஏற்படுத்தும்...

மீன ராசியில் இருக்கும் ராகு கிரகத்துடன் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் புதன் பெயர்ச்சியால் இந்த இணைப்பு நடைபெறும். மீனத்தில் ராகு மற்றும் புதன் சேர்க்கை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்?  

1 /7

நவகிரகங்களும் 12 ராசிக்கட்டத்திற்குள் பெயர்ந்துக் கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு கிரகமும், ஒன்றில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு பெயர்ச்சியாக ஆகும் காலம் மாறுபடும். எனவே, ஒரு ராசியில் இருக்கும் கிரகத்துடன், மற்றொரு ராசி வந்து சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெவ்வேறு கிரக சேர்க்கைகளின் பலன்களை அனைத்து ராசிக்காரர்களும் அனுபவிப்பார்கள்.  

2 /7

ராகுவும் புதனும் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் ஒன்று சேரப்போகிறார்கள். நிழல் கிரகமான ராகுவுடன், சுப கிரகமான புதன் இணைவதால், இத்தனை நாள் ராகுவால் துன்பப்பட்டு வந்த ராசிகளுக்கு சற்று நிம்மதி கிடைக்கும்

3 /7

மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் புதன் பெயர்ச்சிக்கு பிறகு, ராகு இருக்கும் மீன ராசியில் இரு கிரகங்களும் இணையும், இந்த கிரக சேர்க்கையால் மூன்று ராசிகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும், நிம்மதி அதிகரிக்கும்

4 /7

ராகுவால் பிரச்சனைகளில் உழன்றுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம். தொழிலில் எதிர்பாராத வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்தில் இருந்து லாபம் கிடைக்கும், குடும்பத்தில் நிம்மதி நிலவும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும்

5 /7

வெள்நாட்டு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. புதிய தொழில் அல்லது வேலை தொடங்கும் எண்ணம் இருந்தால் அதில் வெற்றி பெறலாம். பண வரவால் குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலைகளைத் தொடங்க முடியும், நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையை அணுகுவீர்கள்

6 /7

கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரத்து அதிகரிக்கும். செல்வச் செழிப்புடன் நிம்மதியும் கிடைத்தால் அதிர்ஷ்டம் தானே? எதிர்பாராத விதமாக பெரும் தொகையைப் பெறும் வாய்ப்பும் உண்டு. நிதி நிலைமை முன்னேறும். வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும். வாய்ச்சவாடல் விடாமல் சாமர்த்தியமாக வேலையைச் செய்து முடிப்பீர்கள்

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது