Health Benefits Of Lemon Juice: நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. சாதாரண மக்கள் வெயிலால் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். கோடையில் நம் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்துவிடும். எனவே அதில் இருந்து காக்க எலுமிச்சை சாற்றை குடிக்கலாம். கோடையில் தினமும் எலுமிச்சை சாறை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கவும்.
காலையில் 1 டம்ளர் எலுமிச்சை சாற்றை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். எலுமிச்சை சாறு கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.
எலுமிச்சை சாறு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற கல்லீரலுக்கு உதவுகிறது. இது உடலில் பித்தத்தை அதிகரிக்கிறதுய. இது கொழுப்பு மற்றும் கொழுப்புக் கட்டிகளை உடைக்க உதவுகிறது.
எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. தினமும் 1 டம்ளர் எலுமிச்சை சாறு உட்கொள்வது பல நோய்களைத் தடுக்கும்.
எலுமிச்சை சாற்றில் உள்ள ஃபெவ்லோனாய்டு என்ற கலவை பல்வேறு வகையான புற்றுநோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. எலுமிச்சை சாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கலாம்.
எலுமிச்சை சாறு உட்கொள்வது வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை உட்கொள்ள வேண்டும். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)