குரு வக்ரபெயர்ச்சியால் திசை மாறும் அதிர்ஷ்டம்! கஷ்டகாலம் ஜூட் விட ரெடியாயாச்சு! உஷாராக வேண்டிய ராசிகள்...

Guru Vakri Gochar In October : ரிஷபத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், 9 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை எதிர்திசையில் இயங்குவார்...

குரு வக்ர கதியில் இயங்கும்போது, சிலருக்கு திடீரென உடல் நலம் குறையும், சிலரின் வாழ்க்கையில் பிரச்சனைகளும் சங்கடங்களும் அதிகரிக்கும்...  ஒட்டுமொத்தமாக குருவின் வக்ர இயக்கத்தால் வாழ்க்கையில் துன்பப்படப்போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொண்டு எச்சரிக்கையாக இருப்போம்...

1 /8

இயல்பிலேயே சுபரான வியாழன் நன்மை தரும் கிரகம். ஞானத்திற்கான கிரகமான குரு பகவான், மிதுனத்தில் வக்ரமடையப் போகிறார். இதன் பலன்கள் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்

2 /8

அக்டோபர் ஒன்பதாம் தேதியன்று குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதலானது பலருக்கு பாதகமாக இருக்கும். யோகதிபதியாக இருக்கும் குரு பாதகாதிபதியாக மாறினால் என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்

3 /8

தொழில் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்தால் தான் தொழில் சிறப்பாக நடைபெறும், அதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துக் கொள்ளவும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன்களை முடிக்காமல் இருப்பதன் தாக்கம் தற்போது உங்களைப் பாதிக்கும்

4 /8

சாதகமான நல்ல விஷயங்களை எதிர்பார்த்து, அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும் என்று நினைத்து வந்த நிலையில், சிறு விஷயம் ஒன்று விஸ்வரூபம் எடுத்து உங்களை கவிழித்து விடும். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் பிப்ரவரி வரை பொறுத்திருப்பது நல்லது  

5 /8

கும்ப ராசியினருக்கு, இந்த குரு வக்ர பெயர்ச்சியின்போது வாக்கு கட்டுப்பாடு மிகவும் அவசியம், தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளவேண்டாம். உங்கள் வார்த்தைகள் பலிதமாகும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு நல்லதை மட்டுமே பேசவும்

6 /8

மகர ராசியினரின் மனதில் மங்கலமான விஷயங்கள் நடத்தும் எண்ணம் அதிகரிக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பை குரு பகவான் வழங்கமாட்டார். காரியத்தடை, வரவேண்டிய பணம் வராமல் இருப்பது என பல்வேறுவிதமான விஷயங்கள் உங்களை அலைகழிக்கும்.

7 /8

வக்ர பெயர்ச்சி என்பது, உண்மையில் ஒரு கிரகம் தான் இருக்கும் இடத்தில் இருந்து, முன்நோக்கி நகராமல், பின்னோக்கி நகர்வதைப் போலத் தோன்றும், ஆனால் உண்மையில் கிரகமானது இருந்த இடத்திலேயே இருக்கும். எனவே, கிரகத்தின் பலம் சுத்தமாக நின்றுபோய்விடும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.