சூர்யாவின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது இந்த திரைப்படங்கள் தான்!

ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா.

1 /5

2005-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கஜினி' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.  இந்த படம் திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.  

2 /5

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான 'நந்தா' படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பு திறமை பிரபலமாக பேசப்பட்டது, இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சிறப்பாக பொருந்தியிருந்தார்.

3 /5

2008-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படம் இன்றுவரை பலரின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.  காதல், குடும்ப பாசம் என வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.  

4 /5

2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' படம் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தனது சிறப்பித்துள்ளது.  இந்த படத்தில் சூர்யாவின் சிறப்பான நடிப்பை பலரும் வியந்து பாராட்டினார்கள்.  

5 /5

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த 'சிங்கம்' படம் நல்ல வரவேற்பை பெற்று மூன்று பாகங்களாக வெளியாகி வெற்றிநடைபோட்டது.