உடல் பருமன் முதல் சுகர் லெவல் வரை....வியக்க வைக்கும் மக்கானா..!!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மக்கானா நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் இதில் ஏராளமாக உள்ளன. எளிமையான உணவாக இருக்கும் மக்கானா என்னும் சூப்பர்ஃபுட் உங்களை பல தீவிர நோய்களிலிருந்து விலக்கி வைக்கும். 

மக்கானா அல்லது தாமரை விதை உலர் பழங்கள் வகையை சேர்ந்தது. தாமரை விதைகளில் புதைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளால், இப்போது மிகவும் பிரபலமான ஆரோக்கிய உணவுக்கான தேர்வாக உள்ளது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நம்மை வியக்க வைக்கும். 

1 /8

மக்கானா என்னும் தாமரை விதை, மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு . மக்கானாவில் கால்சியம் நிறைந்துள்ளது. கூடுதலாக, மெக்னீசியம் இதில் அதிக அளவில் காணப்படுகிறது. 100 கிராம் மக்கானாவில் எத்தனை சத்துக்கள் உள்ளன, அதை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /8

மக்கானாவில் உள்ள ஊட்டசத்துக்கள்: 100 கிராம் மக்கானாவில், புரதம் 9.7 கிராம், நார்சத்து  14.5 கிராம், கால்சியம்  60 மி.கி, இரும்பு சத்து 1.4 மி.கி,  கார்போஹைட்ரேட்டுகள் - 76.9 கிராம் உள்ளன. இதில் உள்ள கலோரிகள் 347.

3 /8

எலும்பு ஆரோக்கியம்: எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. உணவில் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு முறிவு மற்றும் மூட்டுவலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மக்கானா உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை பூர்த்தி செய்யும்.

4 /8

உடல் பருமன்: மக்கானா என்னும் தாமரை விதை, மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும்.   

5 /8

மக்கானா என்னும் தாமரை விதைவில் மிகக் குறைந்த அளவில் கிளைம் செமி குறியீடு எண் உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது. பல ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டும் உள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

6 /8

இதயத்தை ஆரோக்கியம்: மக்கானா இரத்த ஓட்டம் மற்றும் இரத்ததில் உள்ள ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது மேலும், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான மெக்னீசியம் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி மக்கானாவை சாப்பிடுவது நல்லது.

7 /8

மக்கானாவை உட்கொள்ளும் முறை: மக்கானாவை வறுத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். இதை நெய்யில் வறுத்து சாப்பிட்டால், உங்கள் எலும்புகள் வலுவடையும். தவிர, நீங்கள் இதை தயிர் பச்சடி போன்றவற்றில் பயன்படுத்தலாம். நீங்கள் காலை மற்றும் மாலை உணவில் உட்கொள்ளலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.